திங்கள், 12 ஜூலை, 2010

இஸ்ரேலின் தமிழின துரோகம் ........

முள்ளிவாய்க்கால் படுகொலை எச்சங்களை அழிப்பதில் கடந்த 06 மாதங்களாக இஸ்ரேல் நிபுணர்கள் நேரடியாக உதவி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. சர்வதேச பயங்கரவாதம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் பிரித்தானிய பிரஜை ஒருவரால் இந்த செய்தி கசிந்துள்ளது.
சில நோக்கங்கள் கருதி அவரது பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் வன்னியின் இறுதிப்போரில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது. கூடவே போராளிகள் மற்றும் இளைஞர்களையும் சித்திரவதை செய்து கொன்றது.


சிங்கள அரசின் இந்த இனப்படுகொலைகளையும் அப்பட்டமான போர் நிறுத்தங்களையும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் நூறு வீத சாட்சியங்களை வைத்திருந்தபோதும் அதனை தமது வாணிப மற்றும் பொருளாதார பூகோள நலன்களுக்கே பயன்படுத்த முயற்சி செய்கின்றன.


இந்த நிலையிலும் கூட மன்னிப்புசபை மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இலங்கை அரசின் போர் நிறுத்த மீறல்களையும் படுகொலைகளையும் விசாஅரிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் ஓர் விசாரணையினை முடுக்கி விடும் நிலையில்


இலங்கை அரசுக்கு பீதி பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் போர்க்குற்ற மீறல்களை மறுதலிப்பதிலும், சாட்சியங்களை அழிப்பதிலும் கை தேர்ந்தவர்களான இஸ்ரேலிய அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பெரும் நிதிகளை செலவழித்து அழித்து வருகின்றது. கூடவே யுத்த மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக