சனி, 1 ஜனவரி, 2011

யாழிலும் மீன்பிடி முறைகளில் இறுக்கம்

இலங்கையில் நாடளாவிய ரீதியில் சட்டரீதியாக நடைமுறையில் உள்ள மீன்பிடி முறைகளுக்கமைய யாழ் பிரதேச மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டும் என்றும், அவற்றை மீறிச் செயற்படுபவர்கள் மீன்பிடி தொழில்தண்டனைச்சட்டத்திற்கமைய தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டின் துவத்திலிருந்து இந்த நடைமுறை இறுக்கமாக கடைப்பிடிக்கப்படும் என கடற்தொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்டத்திற்கான உதவிப் பணிப்பாளர் கந்தையா தர்மலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.
மீன்வளத்தையும் கடல்வளத்தையும் பாதுகாக்கத்தக்க வகையிலான மீன்பிடி முறைகள் நாடளாவிய ரீதியில் மீனவர்களினால் கைக்கொள்ளப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், போர்க்காலச் சூழல் காரணமாகப் பாதுகாப்புக் காரணங்களுக்காக கடல்வலயத் தடைச்சட்டம் அமுலில் இருந்ததனால், வடபகுதியில் மீனவர்கள் இரவு நேரத்தில் மீன்பிடிப்பதற்குச் செல்ல முடியாமல் இருந்தது.
பகல் வேளையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். அத்துடன் மீனவர்களிடம் மீன்பிடி தொழிலுக்குத் தேவையான வலைகள், உபகரணங்கள் என்பன இல்லாமல் இருந்ததனால், மீன்பிடிப்பது தொடர்பான சட்ட விதிகளில் நெகிழ்ச்சிப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக