சனி, 1 ஜனவரி, 2011

விடுதலைப் போராட்டத்தின் எதிரிகள் அத்தனைபேரும் அடையாளம் காணப்பட்ட ஆண்டு. பிரபாகரன் என்ற வீரனின் புகழ் தொடர்ந்து அதிகரித்து சென்ற ஆண்டு.!!

2010 என்னும் ஆண்டு. 2011 ஐ ஈழத்தமிழனுக்கென்றே உயில் எழுதிவிட்டுப் போகும் ஆண்டாகும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக புலிகளால் வழி நடாத்தப்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல் அவர்களின் வழிநடாத்தல் இல்லாமல் தனிவழி நடந்து பார்த்த முழுமையான ஆண்டு இதுவாகும். இந்த ஆண்டில் நடந்த சம்பவங்கள் என்ன… 2010 விட்டுச் செல்லும் பாடங்கள் என்ன… இதோ சில உதாரணங்கள்…

01. மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியலோடு பகைத்துக் கொண்டு இலங்கையில் அரசியல் செய்ய முடியாது. ஆகவே அரசுடன் இணைந்து பயணிப்பதே நல்லதென தமிழர் கூட்டமைப்பு முடிவு செய்த ஆண்டு.
02. புலம் பெயர் நாடுகளில் சிறீலங்கா அரச தலைவர்கள் வந்தால் கடும் எதிர்ப்பு தொடரும் என்று செய்தியை இங்கிலாந்தில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழர் கிளர்ந்து எடுத்துரைத்த ஆண்டு.
03. சனல் 4 தொலைக்காட்சி யுத்தக்குற்றத்தின் காணொளிகளை வெளியீடு செய்து மகிந்தராஜபக்ஷ அரசுடன் தமிழர்கள் இணைவது சாத்தியமில்லை என்ற கோட்டை தெளிவாக வரைந்த ஆண்டு.
04. வடக்கு, கிழக்கில் ஆயுத உப குழுக்கள் கட்டப்பஞ்சாயத்து செய்யலாம், தமிழ் சிறுமிகளை விபச்சாரத்திற்காக பிடித்து போகலாம் என்று அரச மட்டத்தில் ஆதரவு கொடுக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்ட ஆண்டு.
05. புலிகள் தோற்கடிக்கப்பட்டால், ஈழத் தமிழருக்கு நியாயமான தீர்வு கிடைக்கும். அடிப்படைப் பிரச்சனை புலிகளே என்று பரப்பப்பட்ட பிரச்சாரம் அடியோடு உடைந்து நொருங்கிய ஆண்டு.
06. யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம், புதிய இராணுவ முகாம்கள், புத்தவிகாரைகள் அமைக்கப்பட்டு, தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடாதவருக்கு வாள்வெட்டும் பரமபதமும் வழங்கப்படும் என்று தெளிவாக உரைத்த ஆண்டு.
07. நள்ளிரவிலும் தமிழ் பெண்கள் அச்சமின்றி நடமாடலாம் என்று போற்றப்பட்ட யாழ் குடாநாட்டில் மோட்டார் சைக்கிள் வாங்கினாலே கொலை என்றளவுக்கு குற்றச் செயல்கள் பெருகிய ஆண்டு. விபச்சார விடுதிகள், மதுபான ஆட்டங்கள் என்று சீரழிந்த ஒரு சமுதாயத்தை படம்பிடித்துக் காட்டிய ஆண்டு.
08. ஆயுதங்களை போட்டு சரணடைந்தால் பொது மன்னிப்பு என்று முப்பதாண்டு காலமாக செய்யப்பட்ட சிறீலங்காவின் இனவாதப் பரப்புரை பொய்யானது என்பதை சனல் 4 உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய ஆண்டு. இசைப்பிரியாவின் இறந்த உடலம் அதற்குச் சாட்சி.
09. வட்டுக்கோட்டைத் தேர்தலும், நாடுகடந்த தேர்தலும் நடத்திய புலம் பெயர் தமிழினம் பின் பிரதமர் பதவி பெற்ற புண்ணிய ஆண்டு. தனியரசு, பிரதமர் பதவி என்ற போராட்டத்தை முடித்து, அடையாள அட்டை மட்டும் இல்லாத குறையே குறையென வீரத்தமிழன் குமுறிய ஆண்டு.
10. எத்தனை குழு மோதல்கள் இருந்தாலும் தமிழ் வெகுஜனம் தெளிவாக உள்ளது என்பதை விளக்கிய ஆண்டு. மாவீரர் தினத்திற்கு பெருந்தொகையாக சென்ற புலம் பெயர் தமிழர் மாவீரர் மாறாப் புகழ் பெற்றவர்கள் என்பதை உணர்த்திய ஆண்டு.
11. பிரபாகரனின் உரை இல்லாமல் இரண்டு மாவீரர் உரைகள் உள்ளன என்ற நிலை தொடர்ந்த ஆண்டு.
12. புலிகள் ஆயுதமெடுத்து போராடியது சரியே என்ற உண்மையை தமிழர் அனைவரும் ஒப்புக் கொள்ள வைக்கும்படியாக சிறீலங்கா அரசு அடுக்கடுக்காய் தவறுகளைப் புரிந்த ஆண்டு.
13. புலிகள் மீது குற்றம் சுமத்திய அத்தனை நாடுகளும் புலிகளுக்குப் பிறகு என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் இருந்து அவர்களுடைய ஒழுக்கக்கேட்டு அரசியலை வெளிப்படுத்திய ஆண்டு.
14. நோர்வே புலிகளுக்கு எச்சரிக்கை தரும் கடிதத்தை அனுப்பியது என்ற செய்தி விக்கிலீக்ஸ்சில் வெளிவந்த ஆண்டு. நோர்வே கடைப்பிடித்த மௌனத்தின் பொருள் விளங்கிய ஆண்டு. அதேவேளை நோர்வே சரியான மத்தியஸ்த்தரா என்ற கேள்வியையும் விக்கிலீக்ஸ் எழுப்பிய ஆண்டு.
15. புலம் பெயர் தமிழர் புதிய வலுவுடன் எழுவார்கள் என்று இந்திய, சிறீலங்கா அரசுகளை அஞ்ச வைத்த ஆண்டு.
16. ஈழத் தமிழன் பிரச்சனை பயங்கரவாதப் பிரச்சனையல்ல அது விடுதலைப் போராட்டமே என்பதை மேலை நாட்டு பொதுமக்கள் புரிய ஆரம்பித்த ஆண்டு.
17. ஐ.நா விசாரணைக் குழுவை அமைத்து போர்க்குற்றங்களை அறிய விரும்பிய ஆண்டு.
18. ஈழத் தமிழன் புதுமாத்தளனில் அழிந்துவிடவில்லை அவனுடைய சிறப்பு சீரழிக்கப்பட முடியாதது என்பதை உலகம் ஒப்புக் கொண்ட ஆண்டு.
19. சிறீலங்கா போர்க்குற்ற நாடு என்பதை மறைக்க முடியாது என்று சிங்களம் பீதியடைந்த ஆண்டு.
20. விடுதலைப் போராட்டத்தின் எதிரிகள் அத்தனைபேரும் அடையாளம் காணப்பட்ட ஆண்டு.
19. பிரபாகரன் என்ற வீரனின் புகழ் தொடர்ந்து அதிகரித்து சென்ற ஆண்டு.
20. புலம் பெயர் தமிழரிடையே பல்வேறு மோதல்கள் கிளம்பி உண்மையையும் பொய்யையும் அடையாளம் காண உதவிய ஆண்டு.
பிரபாகரன் என்ற ஈடு இணையற்ற ஒளி அனைத்து இருளான இடங்கள் மீதும் அமைதியாக வெளிச்சம் போட்டுக் காட்டிய ஆண்டு..
2011 ஈழத் தமிழன் தன்மானத்துடன் நிமிர்வான் என்ற நம்பிக்கையை கொடுத்துப் போகும் ஆண்டே 2010.
2010 என்னும் ஆண்டு. 2011 ஐ ஈழத்தமிழனுக்காக எழுதிவிட்டுப் போகும் ஆண்டாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக