சனி, 1 ஜனவரி, 2011

வவுனியா – மன்னார் எல்லையில் 2500 ஏக்கர் காடழிப்பு! நில ஆக்கிரமிப்பு தீவிரம்

வவுனியா – மன்னார் எல்லையில் உள்ள 2500 ஏக்கர் காடுகள் முற்றாக தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலப் பகுதி சிங்கள மயமாக்கப்படும் அதேவேளை இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுவருவதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மன்னார் மாவட்டத்திற்குபட்ட சின்னத்தம்பனை, மடுக்குளம், வேலங்குளம் ஆகிய கிராமங்களை அண்டியதாக இந்த காடழிப்பு இடம்பெற்று வருவதாக அண்மையில் குறித்த கிராமங்களில் மீளக்குடியமர்ந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
குறித்த பகுதியில் இருந்து நாளாந்தம் நான்கு தொடக்கம் ஐந்து வரையிலான பார ஊர்திகளில் விறகுகள் ஏற்றப்பட்டு வெளி இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், அதே எண்ணிக்கையிலான பார ஊர்திகளில் முதிரை, பாலை போன்ற பெறுமதி வாயந்த முதிர்ந்த மரங்கள் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் மரங்களை அறுக்கும் நடவடிக்கையில் பாரிய இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காட்டுப்பகுதியில் இருந்து அயல்கிராமங்களுக்கு நாளாந்தம் ஆயிரம் இராணுவத்தினர் குளிக்கச் செல்வதாக அக் கிராமங்களின் மக்கள் தெரிவிக்கின்றனர்.அங்கு வருகின்ற இராணுவத்தினர் காட்டுப்பகுதி ஏன் அழிக்கப்படுகின்றது என்பது தொடர்பில் முரண்பட்ட தகவல்களை மக்களுக்கு வழங்கி வருவதாக தெரியவருகின்றது.
குறித்த பகுதியில் சாரதி பயிற்சி முகாம் உள்ளதாக ஒரு பகுதியினரும், பாரிய விவசாய பண்ணை ஒன்று அமைக்கப்பட்டுவருவதாக இன்னொரு பகுதியினரும், விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது மற்றொரு பகுதியினரும் தமக்கு முரண்பட்ட கதைகளைச் சொல்வதாக முகாம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியா – மன்னார் எல்லையில் 2500 ஏக்கர் காடழிப்பு! நில ஆக்கிரமிப்பு தீவிரம்!வவுனியா – மன்னார் எல்லையில் உள்ள 2500 ஏக்கர் காடுகள் முற்றாக தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலப் பகுதி சிங்கள மயமாக்கப்படும் அதேவேளை இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுவருவதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,மன்னார் மாவட்டத்திற்குபட்ட சின்னத்தம்பனை, மடுக்குளம், வேலங்குளம் ஆகிய கிராமங்களை அண்டியதாக இந்த காடழிப்பு இடம்பெற்று வருவதாக அண்மையில் குறித்த கிராமங்களில் மீளக்குடியமர்ந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.குறித்த பகுதியில் இருந்து நாளாந்தம் நான்கு தொடக்கம் ஐந்து வரையிலான பார ஊர்திகளில் விறகுகள் ஏற்றப்பட்டு வெளி இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், அதே எண்ணிக்கையிலான பார ஊர்திகளில் முதிரை, பாலை போன்ற பெறுமதி வாயந்த முதிர்ந்த மரங்கள் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் மரங்களை அறுக்கும் நடவடிக்கையில் பாரிய இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த காட்டுப்பகுதியில் இருந்து அயல்கிராமங்களுக்கு நாளாந்தம் ஆயிரம் இராணுவத்தினர் குளிக்கச் செல்வதாக அக் கிராமங்களின் மக்கள் தெரிவிக்கின்றனர்.அங்கு வருகின்ற இராணுவத்தினர் காட்டுப்பகுதி ஏன் அழிக்கப்படுகின்றது என்பது தொடர்பில் முரண்பட்ட தகவல்களை மக்களுக்கு வழங்கி வருவதாக தெரியவருகின்றது.குறித்த பகுதியில் சாரதி பயிற்சி முகாம் உள்ளதாக ஒரு பகுதியினரும், பாரிய விவசாய பண்ணை ஒன்று அமைக்கப்பட்டுவருவதாக இன்னொரு பகுதியினரும், விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது மற்றொரு பகுதியினரும் தமக்கு முரண்பட்ட கதைகளைச் சொல்வதாக முகாம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக