ஞாயிறு, 9 ஜனவரி, 2011

புலிகளின் ஆயுதக்கப்பலுக்கு அரசின் தகவல்களை பரிமாறியதாம் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதக்கப்பல் தொடர்பான அரசின் தகவல்களை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு தக்க சமயத்தில், புலிகளிடம் பரிமாறிக் கொண்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாகுமாரதுங்க குற்றஞ்சுமத்தியுள்ள போதிலும், அந்தக் குற்றச்சாட்டை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகச் செயற்பட்ட ட்ரைக்கோவ்டெலிப்சன் மறுத்துள்ளார் என்று விக்கிலீக்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன்,யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அதிருப்தி வெளியிட்டிருந்தார் என்றும் அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விக்கிலீக்ஸ் மேலும் தெரிவித்தவை வருமாறு
தமிழீழ விடுதலைப் புலிக ளின் வடக்கு, கிழக்குக் கடற்பரப்பில் ஆயுதக் கப்பல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்களை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, புலிகளிடம் தொலைபேசி ஊடாகப் பரிமாறிக் கொண்டுள்ளது என அவர் குற்றஞ்சுமத்தி யுள்ளார்.இந்த விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, நோர்வே அரசிடம் முறைப்பாடு செய்திருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக