வெள்ளி, 30 ஜூலை, 2010

இலங்கை பான் கீ மூனுக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை சுமத்தியுள்ளது...

பான் கீ மூன் இரண்டாம் தடவையாகவும் செயலாளர் நாயகமாக பதவி வகிப்பதனை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.



ரஸ்யா, சீனா, சேர்பியா உள்ளிட்ட அணி சேரா நாடுகளின் ஒத்துழைப்புடன் பான் கீ மூனின் இரண்டாம் தவணை நியமனத்தை தடுப்பதற்கு இலங்கை முயற்சித்து வருவதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.


இதன் ஓர் கட்டமாக பான் கீ மூனுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் பத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.


ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஏதாச்சாதிகாரமாக செயற்பட்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.


ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களுக்கு முக்கியத்தும் அளிக்காது, மேற்குலக நாடுகளின் கைப்பொம்மையாக பான் கீ மூன் செயற்பட்டு வருவதாக இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.


நாடுகளின் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களில் பான் கீ மூன் அனாவசியமாக தலையீடு செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக