வெள்ளி, 30 ஜூலை, 2010

கப்டன் - தமிழ்மதி (கந்தையா-விஜயலட்சுமி) தம்பிலுவில்-அம்பாறை

2005 ம் ஆண்டின் பகுதியில் தன்னை விடுதலைப் போராட்டத்தின் பால் இணைத்து கொண்டு பொறிவெடிகள்,, வரைபடம்,, மருத்துவம். தொடர்பான கற்கை நெறிகளில் ஈடுபட்டு தனது திறமைகளை வெளிக்கொணர்ந்தார்.


அம்பாறை வனப்பகுதியில் இடம்பெறும் எதிரிமீதான தேடுதல் நடவடிக்கை தாக்குதல் நடவடிக்கை அனைத்திலும் சிறப்பாக செயற்பட்டவர்.
2007 -04- 25 வக்குமுட்டிய பகுதியில் எம்மால் மேற்கொள்ளபட்ட
கிளைமோர் தாக்குதல்,2007-06-05 அன்று இடம்பெற்ற காவலரன் மீதான தாக்குதல் என்பவற்றில் மிக தீவிரமாக செயற்பட்டார். தங்கியிருக்கும் வனத்திற்க்கு தேவையான உணவு பொருட்களை தோள்களில் சுமந்து வந்து இருப்பிடங்களில் சேமிக்க வேண்டியதாயிற்று. எத்தகைய பாரத்தை சுமந்தாலும் பொழுது விடிவதற்க்குள் படையினரின் நடமாட்ட பிரதேசங்களை கடந்தாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையிலும் மிகத்திறமையாகவும், தற்துணிவுடன் நிதானமாக சிந்தித்து தீரமாக செயற்பட்டவன்.
2007-09- றூபேஸ் பகுதியில் இடம்பெற்ற இராணுவ ரோந்து அணி மீதான தாக்குதல்,,
2008-08-06 தொடக்கம் 2008-0812 வரை கும்புக்கன் ஓயா பகுதி தொடக்கம் மாணிக்க கங்கை பிரதேசம் வரையான இராணுவ காவலரன்கள் மீதான வேவு நடைவடிக்கைகளில் ஈடுபட்டவர்.
2008- நவம்பர் காலப்பகுதியில்வேவுக்காக சென்றவேளை ஏற்பட்ட  எதிரியின் முறியடிப்பு தாக்குதலொன்றில் மிக சிறப்பாக செயற்பட்டஇவள்  ,2009-04-03 அன்று வீரகவியமானாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக