வெள்ளி, 30 ஜூலை, 2010

தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடிக்கவே இந்திய தூதுக்குழு வருகை !

வடபகுதி தமிழ் மக்களின் காணிகளை கொள்ளையடிப்பதற்காகவே இந்திய அரசாங்கத்தின் தூதுக் குழு இலங்கை வருகிறதே தவிர தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதை கண்காணிப்பதற்கல்ல என்று இட துசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்தார்.

தொடர்மாடி திட்டங்களை அமைத்து மக்களை ஓரிடத்தில் சிறைப்படுத்தி அவர்களின் உழைப்பை உறிஞ்சுவதே இந்தியாவின் நோக்கமாகுமென்று அவர் கூறினார். இந்திய மத்திய அரசின் பிரதிநிதி மீள்குடியேற்றம் தொடர்பாக கண்காணிப்பதற்கு இலங்கை வருவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே சமல் ஜயநித்தி இவ்வாறு தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடபகுதி மக்களின் கலை கலாசாரத்தை இல்லாதொழித்து பாரம்பரியமாக வாழ்ந்து வந்த வாழ்வு முறையை சீர்குலைத்து, தமக்கென்று சொந்த நிலம் என்ற கொள்கையை இல்லாதொழிப்பதே இலங்கை – இந்திய அரசாங்கங்களின் இலக்காகும்.


அதற்காகவே அங்கு தொடர் மாடித்திட்டங்களை அமைத்துக் கொடுக்க இந்தியா முன் வந்துள்ளது.


இதன் மூலம் மக்களை ஓரிடத்தில் சிறைப்படுத்தி அதற்கு அருகேயுள்ள காணிகளில் தொழிற்சாலைகளை நிறுவி மக்களின் உழைப்பை உறிஞ்சுவதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் அம்மக்களின் பாரம்பரிய வாழ்வியல் பாதிக்கப்படும்.


அதற்குத் தேவையான காணிகளை கொள்வனவு செய்வதற்கு இந்தியக் குழு இங்கு வருகிறது. காணி உரிமையில்லாத மக்கள் குழுமத்தை உருவாக்கும் சதியில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக