வெள்ளி, 26 நவம்பர், 2010

முட்டாள்கள் சிங்களவர்களா? தமிழர்களா?

போர் நிறைவடைந்து சுமார் இரண்டு வருடங்களை எட்டுவதற்கிடையில் தமிழர்கள் படும் அவஸ்தை சொல்லிலடங்காது.

சிங்களவர்களின் ஆதிக்கம் குடாநாட்டில் அதிகரித்திருப்பதுடன், நிலவளம், கடல்வளம் என்பவற்றை அபகரித்தும் செல்கின்றனர், அத்துடன் வெளிநாட்டு பணத்தையும் வறுகுவதற்கு என பல தமிழ் ஏமாற்று பேர்வழிகள் அரசியல் பின்னனியில் செயற்பட்டுவருகின்றனர். இதற்கு சிங்கள கூட்டும் ஒருபுறம்.


போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை துடைப்பதற்கு எவரும் இல்லை ஆனால் இவ் அவலங்களை கூறி வயிறுவளர்ப்போர் பட்டியல் நீண்டு செல்கின்றது.

இந் நிலையில் “நாம் இலங்கையர் அமைப்பு” நவம்பர் 15ம் திகதி நடாத்திய நாடகம் வரவேற்கத்தக்கது. போரினால் பாதிக்கப்ட்ட தம் உறவினர்களின் கதி என்னவென இது வரை அறியாது துடித்து நிற்பவர்களுக்கு கதறி அழுவதற்கான ஒரு சர்ந்தப்பம், அதாவது உணர்ச்சி மிக்க போராட்டம் அவ் நாடகத்திற்கு வலு சேர்க்க கல்லெறியும் துணைநின்றது.

சுயநலமிக்க தமிழ் தலைமைகளே சிந்தியுங்கள், நாம் இலங்கையர் என்ற ஜே.வி.பியனரை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தவர்களும், கல்லெறிந்தவர்களும், இதுவரை தமிழர்களுக்கு என ஒன்றுமே செய்யாது சுயநல அரசியல் புரியும் மேல்வர்க்கமும் கீழ்வர்க்கமும், நாடு கடந்தவர்களும், வட்டுக்கோட்டைகளும், எப்பவுமே குறை கூறும் தமிழ் நொண்டி அரசியல் வாதிகளும் சிந்தியுங்கள்.

சுமார் ஒன்றரை வருடங்களுக்க அதிகமாக ஏற்படாத அக்கறை ஏன் இப்போது ஜே.வி.பினருக்;கு ஏற்பட்டது?

ஏற்கனவே வளசுரண்டலில் ஈடுபட்டிருக்கும் சிங்களவர்களுக்கும், சிங்கள மாணவர்களுக்கும், சிங்கள சுற்றுலா பயணிகளுக்கும், தற்போது நாவற்குழியில் குடியேறியிருக்கும் சிங்களவர்களுக்கும் வளங்கும் அரசியல் பாதுகாப்பே ஜே.வி.பியினுடைய நாடகம்.

இந்த நாடகத்தை குழப்புவதாக நினைத்தோ? அல்லது ஏற்பாட்டன் அடிப்படையிலோ? எதுவாக இருந்தாலும் இந் நாடகத்திற்கு கல்லெறிந்ததினால் இது போராட்டமாக இலங்கை முழுவதும் பேசப்படுவதற்கும் உரம் சேர்ப்பதற்கும் உதவியாக இருந்துள்ளது.

விமர்சித்தால் தெய்வ குற்றம் என்று சொல்லும் உணர்ச்சி மிக்க விடயங்களை சுயநல தமிழ் அரசிலாளர்கள் கையாளுவது போன்று, ஜே.வி.பியினரும் காணாமல் போனவர்கள் என்ற உணர்ச்சிமிக்க விடயத்தை கையிலெடுத்து நாடகமாடியுள்ளனர்.

தமிழ் அரசியலாளர்கள் தங்களின் சுயநல அரசியல் மோகத்தினால் மக்கள் தொடர்பான எண்ணம்; அற்று தங்கள் தங்கள் கட்சிகளை விற்கிறீர்கள் அல்லது விபசாரம் செய்கிறீர்கள்.

தமிழரின் நியாயத்திற்கு எதிரான ஒவ்வொருவனும் மிக அக்கறையாக மக்களின் உணர்வுகளை சரிவர புரிந்து தக்க தருணத்தில் குதிக்கிறார்கள், மக்களின் ஆதரவுகளை திரட்டுகின்றார்கள். தமது கட்சி கொள்கைகளை இலகுவாக மக்களிடத்தில் எடுத்துச் செல்லுகின்றார்கள். இதுவே நவம்பர் 15ம் தேதி யாழில் நிகழ்ந்தது.

தமிழர்களின் கண்ணீர்களுக்கு முழுக்க முழுக்க பொறுப்பானவர்கள் நடத்திய நாடகத்தில் குடாநாட்டு மக்கள் விழுந்துவிட்டதற்கு காரணம் என்ன?மோட்டு சிங்களவர் என கூறும் படிப்பாளிகளை கொண்ட தமிழ் சமூகமே சிந்தித்து பாருங்கள், எந்த யோசனையுமின்றி பரம்பரைபரம்பரையாக ஒரே கட்சிக்கு வாக்களிப்பதும், ஓரே ஒரு ஊடகத்தை நம்பியிருப்பதும், ஓரே ஒரு சவர்க்காரத்தை பாவிப்பதிலுமிருந்து எப்போது வெளியே வருவீர்கள்?

எமது பிள்ளைகளை கொன்றவர்கள், தொலைத்தவர்கள், எமது வாழ்வை பறித்தவர்கள், இவர்கள் தான் என மறந்து ஜே.வி.பி நடாத்திய நாடகம் என்றாலும் பரவாயில்லை எமக்கு ஒரு சர்ந்தப்பம் கிடைத்துள்ளது என கிடைத்த சர்ந்தப்பத்தை தவறாது பயன்படுத்துவதற்கு எவ்வளவு துணிவுடன் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

இவர்களுக்கான சர்ந்தப்பத்தை தமிழ் அரசியல் வாதிகள் ஏற்படுத்தாததையிட்டு வெட்கிதலைகுனிய வேண்டும்.

தமது மக்களின் கண்ணீர்களை துடைக்க முடியாதவர்களுக்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் இராணுவ புலனாய்வு பிரிவினரின் பரந்து பட்ட செயற்பாடும் மக்கள் எந்த விதமான ஜனநாயக போராட்டத்திற்கு தயாரற்ற நிலையில் நொந்து போயுள்ளதாலும் அரசின் கடும் போக்கிற்கு எதிராக மக்களை அணிதிரட்டி அரசியல் நடவடிக்கைகளிளோ, போராட்டங்களிளோ ஈடுபடக்கூடிய சூழ்நிலை காணப்படாததினால் தான் அமைதியாக இருக்க வேண்டிய நிலையுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருந்த கருத்து பொய் என்று நவம்பர் 15ம் திகதி யாழ் பேரூந்து நிலையத்தில் ஒன்று கூடிய போரால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.

மக்கள் மத்தியிலும் மற்றும் அரசியல் மட்டத்திலும் உடனடியாக அரசியல் பணிகளில் ஈடுபடவேண்டிய விடயங்களை புறம் தள்ளிவிட்டு உட்கட்சி அடிபாட்டில் தமிழ் தரப்பு ஈடுபட்டுள்ளது.

புலிகளை வெறுக்கும் தமிழ் அரசியளாலர்கள் மக்களின் ஆதரவையும் பணத்தையம் வசூழிப்பதற்கு போராளிகளின்,மக்களின்; தியாகங்களை மெச்சுகின்றனர். ஆனால் அவர்களுக்காக எதையம் செய்யத் தயாராக இல்லை.

சட்டவிரேத வெளிநாட்டு பயனங்களுக்கு எதிராக வெளிநாட்டு அரசுகளுடன் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்ட (கறுப்பு பணமாக முடங்கும் தமிழர்களின் பல கோடி ரூபாய்களை எவ்வாறு தடுப்பது), வள பாதுகாப்பு, பாரம்பரிய தொழில்களை பேணுதல், தமிழர் தரப்பு ஆவணப்படுத்தல் போன்ற சிறிய பெரிய அரசியல் பணிகளில் தமிழர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. ஒருவர்மீது ஒருவர் சந்தேகப்படும் சுயநலமிக்க தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் வரை இப் பணிகள் சாத்தியப்படாது.

எனவே மக்களுக்கு உதவாக தமிழ் தலைமைகளை ஓரம்கட்டிவிட்டு, மக்களுக்காக பணியாற்றக் கூடிய புதிய அரசியல் தலைமையை தமிழர்கள் உருவாக்க வேண்டும்.
யாழ்க்கு விஜயம் செய்ய 2006 ஆண்டு பலாலியில் ஜே.வி.பியினர் வந்திறங்கிய போது யாழ் மாவட்ட செயலகத்தில் செருப்புமாலை வைத்து எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வியஜம் ரத்தாகியது.

செருப்புமாலை வைப்பதற்கு மக்களை தூண்டி படுகொலைகள், காணாமல்போனோர் பட்டியலை நீட்டியவர்கள், இன்று வெற்றிலைவைத்து வரவேற்கிறார்கள்.

ஆக மொத்தத்தில், தற்போது இருக்கும் சாக்கடைகளுக்கு வாக்களித்து வாழ்வை இழப்பதற்குப் பதிலாக பேரினவாதிகளை நேரடியாக ஆதரித்து சொற்ப சுகத்தையாவது பெறவது மேல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக