வெள்ளி, 7 மே, 2010

தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா....

உலகம் முழுக்க ஈழத்தமிழர்கள் கொடிகட்டி பறந்தாலும், சொந்த மண்ணில் வெந்த புண்ணாகதான் இருக்கிறது அவர்களின் வாழ்க்கை.

இவர்களை ஏமாற்றுவதில் இப்போது இந்திய தமிழனுக்கும், இலங்கை தமிழனுக்கும் நடக்கும் போட்டி உச்சகட்டத்திற்கு வந்திருக்கிறது.

தலைகுனிந்து ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை இது.

தமிழர்களை கொன்று குவித்த ராஜபச்சேவின் ஆலோசனையின்படி நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்ட இந்திய திரைப்பட விழாவில்
 கலந்து கொள்ள அமிதாப்பச்சன் செல்வதாக இருந்ததும், பின் அது உணர்வுள்ள தமிழக தலைவர்கள் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டதும் மக்கள் அறிந்த விஷயம். ஆனால் இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குள்ளாகவே மேலும் ஒரு சர்ச்சை. இந்த முறை இதில் சிக்கியிருப்பது டெலிவிஷன் கலைஞர்கள்.

இம்மாதம் 7-8 தேதிகளில் வவுனியா மற்றும் யாழ் நகரங்களில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இங்கிருந்து தொலைக்காட்சி நடிகர் நடிகைகளை அழைத்துச் செல்ல முயன்றனர் சிலர். கொடுமை என்னவென்றால் ஈழத்தில் போர் நிறுத்தம் நடந்ததன் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடும் நிகழ்ச்சிதானாம் இது.

யாரோ ஒரு ஈனப்பிறவி இந்த நிகழ்ச்சிக்கு ஆள் பிடித்து தருகிறேன் என்று கோடம்பாக்கத்திற்கு வந்ததும், அவர்களை வாயார வரவேற்று அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு பயணத்திற்கு தயாரானதும் எவ்வளவு கொடுமை? அழைக்க வந்தவன் இலங்கை தமிழன். அந்த அழைப்பை பல்லிளிக்க ஏற்றுக் கொண்டு சூட்கேசில் துணிகளை அடைத்துக் கொண்டு பயணத்திற்கு கிளம்பியவன் இந்திய தமிழன். இந்த கொடுமையெல்லாம் நடக்கும் என்று தெரிந்தேதான் முன்பே செத்தான் போலிருக்கிறது எங்கள் ரோசக்கார தமிழன்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக