வெள்ளி, 7 மே, 2010

தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இளைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டுமாம் - பொன்சேகா

யுத்தக் காலப்பகுதியில் இராணுவத்தினர் நாட்டுக்கும், மக்களுக்கும் எதிராக குற்றம் செய்திருந்தால், அவை வெளிக்கொணரப்படும். தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் எவராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயக தேசிய கூட்டணியின் விசேட செய்தியாளர் மாநாடு இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது. இதன்போது போர்குற்றங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதில் அளிக்கும் போதே ஜெனரல் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்திருந்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பொன்சேகா, "முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் எந்தவொரு சம்பவத்தையும் மறைக்க விரும்பவில்லை. இச் சம்பவங்கள் தொடர்பில் எந்தச் சந்தர்ப்பத்தில், எவர் கேட்டாலும் அவை குறித்து வெளிப்படையாகக் கூற நான் தயாராக இருக்கிறேன்" என மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக