திங்கள், 1 மார்ச், 2010

தமிழர் தாயக கரையோரப்பகுதிகளில் காவலரண்களை நிர்மாணிக்கும் சிறீலங்கா

கிழக்கு கரையோரப்பகுதிகளில் புதியகாவலரண்கள் அமைக்கும் பணியில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சிறீலங்காப்படையினரால் வல்வளைப்பிற்கு உட்படுத்தப்பட்ட வன்னிப்பிரதேசங்களில் புதிய பல காவலரணங்கள் சிறீலங்காப்படையினரால் அமைக்கப்படுவதுடன் வீதிசோதனையினை மேற்கொள்ளும் நோக்கிலான சேதனை சாவடிகளும் எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முல்லைத்தீவில் சிறீலங்கா கடற்படையினர் பாரிய காவலரண்கள் அமைத்து கனரக ஆயுதங்களை நிலைநிறுத்தியிருக்கின்றனர்.தற்போது கிழக்கின் மட்டக்களப்பு அம்பாறை வரையான கரையோரப்பகுதிகளில் புதிய காவலரண்கள் அமைக்கும் பணியில் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் புதியபல காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை கிழக்கின் கடற்கண்காணிப்பும் சிறீலங்காப்படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடப்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக