வெள்ளி, 2 ஜூலை, 2010

புலனாய்வாளர்களின் உள்நோக்கம் கொண்ட சதி...!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குடும்பிமலை காட்டுப் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சிறிலங்கா இராணுவ அணிக்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை நடந்ததாகவும் அதனால் அந்த பகுதியில் விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது.



இதனால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இராணுவப் புலனாய்வாளர்களின் உள்நோக்கம் கொண்ட சதித்திட்டம் ஆகும். விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும், போராளிகளை சட்டத்தின் முன் நிறுத்தாமலும், முகாங்களில் வாழும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை மீள் குடியேற்றாமலும் இழுத்தடிப்பு உபாயத்தை கையாள்கின்றது.


மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவ முகாங்களை அதிகரித்தும் பலப்படுத்தியும் வருகின்றது. இதனால் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது. குண்டு வீச்சு நடத்தப்பட்ட இடத்திற்கு அண்மித்தாக போராளிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் புனர்வாழ்வு முகாம்கள் இயங்குகின்றன.


அவற்றை இலக்கு வைத்துக் குண்டு வீச்சு நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. போர்க் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாகக் கூறும் அரசிற்கு இனப் பிரச்சனைக்குரிய தீர்வை முன்வைக்குமாறு சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வரும்வேளையில் இன்னும் புலிகள் தலைமறைவாகச் சிறு குழுக்களாக காடுகளுக்குள் இயங்கிக் கொண்டு இருக்கின்றர்கள் என்ற தோற்றப்பாட்டை உருவாக்க முற்படுகின்றார்கள்.


குடும்பிமலைக் குண்டு வீச்சிற்கு கொழும்பு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உண்மையில் இப்படியான செய்திகளை இராணுவமும், புலனாய்வாளர்களும் ஆபாத்தான சதித்திட்டங்களை தீட்டி வருகின்றனர்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக