திங்கள், 1 நவம்பர், 2010

கப்டன் பிரான்சிஸ்

1948 இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து எந்த சிங்கள அரசு பதவிக்கு வந்தாலும் அந்த அரசின் பதவிக்காலத்திலும் பதவிக்காலத்தின் முடிவிலும் தமிழ் மக்கள் உரிமைகளில் ஏதோ ஒன்றை அவர்கள் இழந்துபோய் இருப்பார்கள். இவ்வாறு 48 இல் இருந்து ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழினம் தமிழ் அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனங்களை உணர்ந்து தன்னை சுதாகரித்து 1972 க்குப் பின்னர் தமிழ் இளைஞர்கள் மனங்களில் சிங்களத்துக்கு எதிராக போராட வேண்டும் என்ற உணர்வுகள் மேலோங்க தொடங்கியபோது ஆயுதப் போராட்டமே அதற்கான வழியென பல விடுதலை இயக்கங்கள் சிங்களத்துக்கு எதிராக போராடப் புறப்பட்டன .
சிங்களத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களினாலும் இன ஒடுக்கலாலும் மேலும் பாதிக்கப்பட்ட தென்தமிழீழமக்களும் தமிழ் மக்களின் விடுதலைக்கான தேவை மிக உணர்ந்து தம்மை பல இயக்கங்களில் இணைக்கத் தொடங்கினார்கள் . இவ்வாறு ஒரு ஆயுதப் போராட்டமே தமிழ் மக்களின் இருப்பை இலங்கையில் உறுதிபடுத்தும் என எண்ணிய சடாச்சரபவனும் 1983 இல் இயக்கத்தில் இணைய முடிவெடுக்கிறார் .
இவரது அண்ணனின் நண்பர்களின் ஊடாக விடுதலைப்புலிகள் பற்றியும் ,அதன் தலைவர் பற்றியும் அறிந்திருந்த சடாச்சரபவன்விடுதலிப்புலிகள் இயக்கத்தில் இணைந்துபிரான்சிஸ் ஆனதில்ஆச்சரியமில்லை .
மக்களுடன் மிகவும் இயல்பாக பழகும் சுபாவமுடைய பிரான்சிஸ் கிழக்கில் மக்களை அரசியல் தெளிவானவர்களாகவும் ,தமிழீழ விடுதலையின்தேவை பற்றியும் வடக்கு கிழக்கு இணைந்திருப்பதன் மூலம் தமிழ் மக்கள் பலமுடைய ஒரு இனமாக விளங்க முடியும் என்பவைகள் பற்றியும் மிக இலகுவாக மக்களுக்கு எடுத்து விளக்கி கிழக்கில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பலமான அத்திவாரமிட்டவர் .
இயக்கத்துக்கு புதிய போராளிகளை இணைக்கும் முக்கிய வேலையைச் செய்த பிரான்சிஸ் அக்காலத்தில் மட் \அம்பாறை மாவட்டத்தின் முக்கிய தொடர்பாளராகவும் பணியாற்றினார் .அரசியல்வேலைகளிலும், நிர்வாகதிறமைகளிலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியிருந்த பிரான்சிஸ் இராணுவ ரீதியான தாக்குதல்களில் அக்காலத்தில் ஒரு முன்னணி வீரராக செயல்பட்டார் .
அக்காலகட்டத்தில் மிகவும் பரபரப்பான முக்கியமான நடவடிக்கையாக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மட்டக்களப்பு சிறை உடைத்து நிர்மலா நித்தியானந்தன் மீட்கப்பட்ட நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியிருந்தார் . அத்துடன் களுவாஞ்சிக்குடி போலிஸ் நிலையத் தாக்குதல் , ஏறாவூர் போலிஸ் நிலையத் தாக்குதல் ,மாங்கேணி இராணுவ முகாம் தாக்குதல்களில் ஒரு முன்னணி வீரராகச் செயல்பட்டார் .மட்/அம்பாறை அரசியல் துறை பொறுப்பாளராக பிரான்சிஸ் கடமையாற்றிய காலத்தில்தான் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு பெரும் இடர்களை ஏற்படுத்திய இந்திய இராணுவத்தின் வருகை அமைந்திருந்தது .
இலங்கை இந்திய ஒப்பந்தம் சம்பந்தமாகவும், ஆயுதங்கள் ஒப்படைப்பு சம்பந்தமாகவும் தேசியத்தலைவரால் மேற்கொள்ளப்பட்ட சுதுமலை பிரகடன பொதுக்கூட்டத்திற்கு மட்/அம்பாறை பிரதிநிதியாக கலந்து கொண்டவர்களின் பிரான்சிசும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இந்திய இராணுவ வருகை ,அவர்களின் நோக்கம் என்பவை பற்றி தலைவரின் ஆலோசனைகளைப் பெற்று திரும்பியபின் முன்னரிலும் வேகமாக போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதில் ஈடுபட்டார். பிரான்சிஸ் காலத்தில் இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளை தனது சமய நிறுவனங்கள் ஊடாக வெளிக்கொணர்ந்த வணக்கத்துக்குரிய பாதர் சந்திரா இந்திய இராணுவத்தின்உதவியுடன் EPRLF தேசத் துரோகக் கும்பலினால் சுட்டுக்கொல்லப்பட்டார் .மற்றும் தமிழ் ஆசிரியர்சங்கத் தலைவர் வணசிங்கா ஆசிரியர் ,கணபதிப்பிள்ளை ஆசிரியர் உட்பட மேலும் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர் .கிழக்கு அன்னையர் முன்னணியால் ஒழுங்கமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட அன்னை பூபதியின் உண்ணா நோன்புநிகழ்வுக்கும் தன்னாலான ஆலோசனைகளையும் பங்களிப்பையும் வழங்கி அன்னையர்களின் போராட்டத்துக்கு ஆதரவளித்தார் .
இந்திய இராணுவ நெருக்கடிகளுக்குள் தனது அரசியல் பணிகளை முன்னெடுத்துவந்த பிரான்சிஸ் 31.10.1988 அன்றும் வழமை போல் தன்னுடைய பணிநிமித்தம் தனது சொந்தக் கிராமத்தில் தங்கியிருந்தபோதுதான் அந்த துயர் சம்பவம் நடைபெற்றது .
தான் தங்கியிருந்த பகுதி இந்திய இராணுவத்தாலும் ,EPRLF தேசவிரோதி களாலும் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தப்புவதற்க்கான இறுதி முயற்சியாக புகைக்கூடு ஒன்றினுள் மறைந்திருந்தபோது அங்குவந்த EPRLF தேசத்துரோகி ஒருவரால் சுடப்பட்டு தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த பல்லாயிரம் மாவீரர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்டார் கப்டன் பிரான்சிஸ் .
தமிழ் மக்கள் விடுதலை பெற்ற ஒரு சுதந்திர இனமாக வாழ வேண்டும் என்ற உயரிய இலட்சியத்திற்காக தன் இன்னுயிரைஅர்ப்பணித்த இம் மாவீரனை இன் நாளில் நினைவு கூர்ந்து எமது வீர வணக்கத்தை செலுத்திக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக