திங்கள், 21 பிப்ரவரி, 2011

எங்கள் ஈழத்தாயே சென்று வா…..!

உலகே உனக்கு கண்ணில்லையா?
எங்கள் தமிழிழ மண் என்ன மண்ணில்லையா?
பண்டார வன்னியன் மண்ணிலே!
படுத்துறங்கும் எங்கள் தலைவனின் கருவரைக்கு
இன்று இறுதி ஊர்வலம்

உலகாண்ட பரம்பரையின் அன்னை
எம் மண்ணில் உயிர் பிரிந்தால் -ஆனால்
உறவுகள் கூடி அழுவதற்கே உரிமையில்லை
அனாதைகலானோமே என்று அழுகுதம்மா
உந்தன் தமிழ் குடி

ஆறுதல் சொல்வதற்கோ யாருமில்லை
குடும்பமே அழிந்ததென்று கொக்கரிக்கும்
குள்ளநரிக் கூட்டங்களும் உலாவுதம்மா
எட்டி நின்று ஏங்குதங்கே
உந்தன் கொள்ளிக் குடம்
அதை எடுத்துவர முடியவில்லை என்று
ஈனத் தமிழினத்தின் விடுதலைக்கு
உன் வீர இளையமகன் கொடுத்த விலை
யாரரிவார் தாயாரே


வானவரும் மண்ணவரும் சூழ்ந்து நின்று
புனிதரும் மனிதரும் பூக்கள் தூப
உலக நாட்டு தலைவரேல்லாம்
இரங்கள் பா கூறி
சந்தனப் பேளையிலே தலைவனும் தளபதிகளும்
சுமந்து செல்வதாய் நினைத்து உன்னை
வழியனுப்பி வைக்கின்றோம் தாயே
பாலைவனமோ வான் கடலோ
பாருலகில் எங்கேயோ
எங்கள் தலைவனின் பார்வை படும் என்று நம்பி
வழியனுப்பி வைக்கின்றோம் தாயே…….

1 கருத்து: