திங்கள், 8 பிப்ரவரி, 2010

ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பியதும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்?

மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்யாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பியதும் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. அவர் நாளை மறுதினம் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26 ஆம் திகதி நடத்தப்பட்ட ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார். இதனையடுத்து தனது இரண்டாவது தவணைக்காலம் எப்போது ஆரம்பமாகி எப்போது நிறைவு பெறுகின்றது என்பது தொடர்பிலான ஆலோசனைகளை வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம் எழுத்து மூலமாக கோரியிருந்தார். அது தொடர்பில் பிரதம நீதியரசர் அசோக என் சில்வா தலைமையிலான நீதியரசர்களான ஷிராணி பண்டாரநாயக்க, பாலபெத்த பெந்தி, ஸ்ரீபவன், ஏக்கநாயக்க, சந்திரா ஏக்கநாயக்க, இமாம் ஆகிய ஏழு நீதியரசர்கள் குழு கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை (10) விரிவாக ஆராய்ந்தனர். இந்த ஆலோசனைகள் மறுநாள் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது , அதன் பிரகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலம் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது அதன் பிரகாரமே ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக