ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணும் மோசடி - 12 இந்திய கணனி தொழில் நுட்பவியலாளர்கள் ஈடுபட்டனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணூம் போதான மோசடிகளில் ஈடுபடுவதற்காக 12 கணனி தரவு நிரற்படுத்தும் தொழில் நுட்ப நிபுணர்கள் இந்தியாவில் இருந்து மஹிந்த அரசினால் வரவளைக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு சிங்கள இணையதளம் ஒன்று கூறியுள்ளது. இந்த 12 பேரும் இந்தியாவில் பிரபல கம்பனி ஒன்றில் பணி புரிகின்றவர்கள். இந்த கம்பனி இலங்கையில் பல்வேறு வியாபாரங்களை மஹிந்த அரசின் மூலம் செய்துவருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.
 இலக்கம் 5 ஸ்ரேசன் ஒழுங்கை, பார்க் ரோட், நாரகென் பிட்டியில் இவர்கள் தங்க வைக்கப்படிருந்தனர் எனவும் கூறப்படுகின்றது. இந்த 12 பேரும் தேர்தல் தரவுகளை கணனிமயப்படுத்தும் ஆலோசனைகளை வழங்குவதற்கு என அமர்த்தப்பட்டு இருந்தனர் என்றும். இவர்களே மோசடிகளை செய்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே விளையாட்டினை பொது தேர்தலிலும் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக