சனி, 19 ஜூன், 2010

புத்தபிரானின் வாக்கு....

யுத்தத்தில் தோற்றவர்களை விட வென்றவர் களுக்கே அதிக துக்கம் என்பது கெளதம புத்த பிரானின் வாக்கு. இந்த வாக்கின் நிஜத்தை இந்த நாடு விரைவில் அனுபவிக்கப்போவதாக சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் எச்சரித்திருக்கிறார்.
இந்த எச்சரிக்கை எதனையும் இலங்கை அரசு கவனத்தில் கொள்ளவில்லை. எனினும் நேற்றையதினம் கொழும்பில் நடத் தப்பட்ட யுத்த வெற்றியின் ஓராண்டு விழா, இலங்கை மக்களின் முழுமையான ஆதரவுக் குட்படவில்லை என்பதை உணரவேண்டும்.

இலங்கை என்ற இந்த அழகிய நாட்டை இங்கு வாழ்கின்ற அத்தனை மக்களினதும் உரிமைக்குரியதாக ஆக்குகின்றபோதுதான் அமைதி, சமாதானம் என்ற உயரிய இலக்குகளை நாடு அடைய முடியும்.
இதைவிடுத்து, வெற்றிவிழாக் கொண்டாடு வதன் மூலமாகவோ அல்லது இனம்சார் எழுச் சியைத் தூண்டுவதன் மூலமாகவோ இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது. இந்த உண்மைகள் உணரப்பட வேண்டிய தாக இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக அதுபற்றிச் சிந்திப்பதில் பெரும்பான்மை இனம் தவறிழைத்து விடுகிறது .
வன்னியில் நடந்த மிகப்பெரும் கொடூர யுத்தத்தில் தங்கள் உறவுகளை பறிகொடுத்து விட்டு சதா கண்ணீர்விடும் பல்லாயிரக்கணக் கான மக்களின் துயர் ஒருபுறம். குடியிருப்பதற்கு வீடில்லை. அடிப்படை வசதிகள் ஏதுமில்லை.
சிறுகுடிசையில் வாழும் பரிதாபம் மறுபுறம் என்ற பெரும் கொடுமையில் தமிழ் மக்கள் தவியாய்த் தவிக்கின்ற போது, கொழும்பில் நடந்த வெற்றிவிழா எதனைக் குறித்து நிற் கிறது? இத்தகைய கேள்வியை யாரேனும் கேட்பார் களாயின், இலங்கை சிங்கள மக்களின் நாடு என்பதை அரசு மீண்டும் ஒருமுறை ஞாபகப் படுத்துகிறது என்பதே பதிலாக அமையும்.
ஒரு நாடு போர்வெற்றியைக் கொண்டாடு கின்றதெனில் அந்த வெற்றியில் அனைத்து மக்களும் இணையவேண்டும். இதைவிடுத்து ஒரு இனத்தின் வெற்றியாக அது கொண்டாடப் படுமாயின் அந்த நாட்டின் ஜனநாயகம் என்பது துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றதென்பதே பொருளாகும்.


எதுவாயினும் இலங்கை அரசு போர்வெற்றி என்பதை மாற்றி இனப்பிரச்சினைக்கு நியாய மானதும், நிரந்தரமானதுமான தீர்வை அடைந்த பின் சமாதானத்தின் வெற்றியாகக் கொண் டாடி இருக்குமாயின், அடடா! இதுவல்லவோ அரசு என்று நாட்டின் எல்லா மக்களும் புகழ்ந்து பேசியிருப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக