சனி, 19 ஜூன், 2010

ஐ. நாடுகள் அலுவலகம் திறப்பு..

முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை கிளிநொச்சியில் கால் பதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அலுவலகமே இன்று கிளிநொச்சியில் திறக்கப்பட்டுள்ளது.



இந்த அலுவலகத்தின் ஊடாக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திதிட்டம், யு.என்.எச்.சீ.ஆர் மற்றும் யுனஸ்கோ போன்ற அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.


தற்போது இங்கு நான்கு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் உத்தியோகத்தர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். இந்த அலுவலகத்தின் மூலம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவவுள்ளனர். அத்தோடு உணவு விநியோக திட்டத்தையும் கண்கானிக்கவுள்ளனர்.


கடந்த 2008 செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட கிளிநொச்சி அலுவலகம் மூடப்பட்டு பலாத்காரமாக இலங்கை அரசாங்கத்தினரால் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக