செவ்வாய், 6 ஜூலை, 2010

மஹிந்த தேர்தல் செலவிற்காக என்னிடம் ஆறு இலட்சம் ரூபா பெற்றார் ...

மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தேர்தல் விளம்பரத்திற்காக என்னிடம் ஆறு இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் கண்ணீர் மல்க அதனை பெற்றுச் சென்றார். இவ்வாறு நேற்று பாராளுமன்றில் கூறினார் பொன்சேகா.



மேலும் பேசிய பொன்சேகா மிலானில் 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை அங்கு அனுப்பியது யார்? என்பதை கண்டறிய வேண்டும். உள்நாட்டு முரண்பாடு சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது.


வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 60 வயது வரை நான் சேவையில் இருந்திருக்கலாம். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னரே நான் ஓய்வு பெற்றேன். வெளிநாட்டுக்கு செல்லும் இராணுவ வீரனுக்கு 200 டொலர்களே வழங்கப்படும். எனினும் ஜனாதிபதியின் மகனுக்கு 5000 டொலர்கள் வழங்கப்பட்டது எவ்வாறு? அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் மக்களை கைது செய்யும் நடவடிக்கையிலேயே சி.ஐ.டி. யினர் ஈடுபட்டனர். எனினும் இன்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பின்னாலும் சபாநாயகர் பின்னாலும் ராஜபக்ஷ குடும்பத்தினரின் பின்னாலும் அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். பந்தம் பிடிப்பதற்கு அன்று ஒருவரே இருந்தார் இன்று அப்பணியை பலரும் செய்கின்றனர். என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக