திங்கள், 16 ஆகஸ்ட், 2010

எ.வி.சன் சீ கப்பலில் ஆயுதங்கள் எதுவும் இல்லை; அவர்களை திருப்பி அனுப்ப கூடாது...

எம்.வி சன் சீ கப்பலில் பயணித்தவர்களுக்கு அனைத்து வசதிகளும் கப்பலில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்ததாக கனேடிய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கப்பலில் உறங்குவதற்கான அறைகள், சுத்தமான உணவு வகைகள், சுத்திகரிக்கப்பட்ட நீர், உண்பதற்காக மீன்வகைகள் என அனைத்து வசதிகளும்
 செய்துக் கொடுக்கப்பட்டிருந்ததாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரை மேற்கொள்காட்டி கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அத்துடன், கப்பலில் ஆயுதங்கள் உள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். தாம் கப்பலை முழுமையாக சோதனையிட்டுள்ளதாகவும், கப்பலிலிருந்து எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதெ வேளை கப்பலில் வந்திருந்த அனைத்து அகதிகளையும் உடல் நல பரிசோதனையின் பின்னர் சிறைகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என கூறப்படுகின்றது.


கனடாவிற்கு தஞ்சம் கோரி வந்தவர்களை அகதிகளாக ஏற்கவேண்டும் - குயீன்ஸ் பல்கலை கழகம்


கனடாவிற்குள் தஞ்சம் கோரி வந்த தமிழர்களை அகதியாக ஏற்கவேண்டும்; கனேடிய அரசு அகதிகளை உள்வாங்கும் எண்ணிக்கையினை அதிகரிக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார் குயீன்ஸ் பல்கலை கழக சட்டத்துறை பேராசிரியர் சரின் ஐக்கன் அவர்கள். 1959 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அகதிகள் சட்டம் 1967 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அகதிகள் சாசனம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கனடா இந்த ஏற்பாட்டை செய்யவேண்டும். இல்லையேல் கனேடிய அரசு ஐக்கிய நாடுகளின் சாசனத்தை மீறுவதாக கருதலாம் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக