திங்கள், 16 ஆகஸ்ட், 2010

இளம் பெண்களை கண்டிக்கு வேலைக்கென அழைத்து செல்லமுற்பட்டமைதடுக்கப்பட்டது.!

கவர்ச்சியான சம்பளங்களுடன் பல சலுகைகளும் வழங்கப்படும் என கிளி/யில் இருந்து 40 இளம் O/L, படித்த இளம் பெண்களை கண்டிக்கு கூட்டி செல்ல முற்படும் வேளை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பயிற்சிக்காலம் முடிவுற்ற பின் அதிகூடிய சம்பளமாக 14 ஆயிரம் ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்புக் கொடுப்பனவாக 2 ஆயிரம் ரூபாவிலிருந்து ஐயாயிரம் ரூபா வரையிலும், உற்பத்தித்தரக் கொடுப்பனவாக ஆயிரத்து அறுநூறு ரூபாவும், மேலதிக நேர வேலைக்கு 2 ஆயிரத்து ஐநூறு ரூபாவும், அதற்கும் அதிகமாகவும் மற்றும் இலவச சுகாதாரம், காப்புறுதி வசதி, தங்குமிட வசதி மற்றும் காலையுணவு, மதிய நேரத் தேநீர், உரிய இடத்துக்கான போக்குவரத்து வசதி, இறப்பின் போது 30 ஆயிரம் ரூபா பணம் போன்றன சலுகைகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.


இந்த நிலையில் நேற்றைய தினம் துண்டுப்பிரசுர மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த கிளிநொச்சிப் பிள்ளையார் கோயிலுக்குப் பதிலாக அரச செயலகத் துக்கு அருகில் மர நிழலிலேயே நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்றைய நேர்முகத் தேர்வினைத் தொடர்ந்து குறிப்பிட்ட யுவதிகளை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதற்காக அவர்களின் பெற்றோர்களும் அந்த இடத்துக்கு வருகை தந்திருந்தனர்.
இதுதொடர்பான மக்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பெற்றோர், யுவதிகளுக்கு உண்மையை விளக்கினார்.


அந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர்களைச் சந்தித்துக் கேட்டபோது கிளிநொச்சி யுவதிகள் 40 பேருக்குத் தொழில் பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாகவும் அதற்காக அவர்களை கண்டிக்கு அழைத் துச் செல்வதாகவும் கூறினர்.
கிளிநொச்சி இராணுவக் கட்டுப்பாட் டில் இருக்கும் ஒரு மாவட்டம். அங்குள்ளவர்கள் வெளியேற சில நடைமுறைகள் உள்ளன. இராணுவத்திடம் அனுமதி பெற்றே அவர்கள் வெளியில் செல்ல வேண்டும்.
கிளிநொச்சி மக்கள் குடும்பங்களாக இராணுவத்தினரால் பதியப்பட்டுள்ளனர். இராணுவத்தினர் சோதனை செய்யவரும் போது பதியப்பட்டவர்கள் இல்லை யென்றால் பிரச்சினையாகிவிடும். அதனால், இராணுவ அனுமதியைப் பெற்றே அம்மக்கள் வெளியில் செல்லவேண்டும்.
ஆனால், இந்தக் குறிப்பிட்ட நிறுவனம் இந்த யுவதிகளை அழைத்துச் செல்வதற்கு அனுமதி கேட்டு இராணுவத்தரப் பிடம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்திற்குப் பதில் வரும் முன்பே விண்ணப்பித்த யுவதிகளை அழைத்துச் செல்ல முயற்சி செய்தது என்பது தெரிய வந்தது.
இந்த நிலைமையை விளக்கியே அந்த யுவதிகளை அழைத்துப் போகவிடாது தடுத்தேன். இதற்கு மாற்றுவழியாக அந்த நிறுவனம் கிளிநொச்சியில் வைத்தே 200 யுவதிகளுக்குப் பயிற்சி வழங்கப்போவ தாக கூறிச் சென்றுவிட்டது. என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக