வெள்ளி, 17 செப்டம்பர், 2010

சரத் பொன் சேகாவுக்கு 3 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை

நாடாளுமன்ற உறுப்பினரும் முன் னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன் சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதி மன்றம் 3 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்புதலின் பின்னரே அமுலுக்கு வரவுள்ளது.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பதவி வகித்தபோது மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கொள்வனவில் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அந்நீதிமன்றம்  தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்தது
.
இந்தச் சிறைத்தண்டனைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இரு வருடங்களுக்கு மேலான சிறைத்தண்டனையாக இருந்தால் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார். அத்துடன் சிவில் உரிமையும் 7 ஆண்டுகளுக்கு இழப்பார்.இதன் அடுத்த 6 வருடங்களில் இடம்பெறும் தேர்தல்களிலும் அவர் போட்டியிடமுடியாத நிலை ஏற்படும் எனச்சுட்டிக்காட்டப்பட்டது. ஏற்கனவே இராணுவ நீதிமன்றம் வழங்கிய சிபார்சை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதால் பொன்சேகா தமது சேவையில் பெற்ற பதக்கங்கள் யாவற்றையும் இழந்தார் என்பது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக