செவ்வாய், 7 செப்டம்பர், 2010

கொன்றவன் சொகுசு வீட்டில் கொல்லப்பட்டவர்கள் மரத்தின் கீழ் !!!!!

எல்லோருமே தன் மக்கள் எனக்கூறும் மஹிந்த தமிழர்களுக்கு இன்னமும் உதவமுன்வராதது ஏன்? தொடர்ந்தும் அடிமைகளாகவும், கைதிகளாகவும் தமிழர்களை வைத்திருப்பது ஏன்? வன்னி யுத்தத்தில் 40 ஆயிரம் மக்களை கொன்று
 குவித்து 3 இலட்சம் மக்களை வேரோடு பிடுங்கி எடுத்து முகாம்களில் அடைத்தது மஹிந்த அரசு. தன்னுடைய பிசாசுகளால் கொல்லப்பட்ட மக்களின் உறவுகளுக்கோ அல்லது வேரோடு விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கோ இன்னமும் நட்ட ஈடுகளையோ இழப்புக்களையோ கொடுக்கவில்லை.


பாதிப்பு அடிப்படையில் பார்த்தால் கூட அரசாங்கம் தான் தமிழர்களின்அளிவுகளுக்கு பொறுப்பெடுத்து மக்களிற்கு செய்ய வேண்டும். ஆனால் அரசாங்கம் அதனை செய்யவில்லை.அவர்களை மரங்களின் கீழும் தரையிலும் விட்டுவிட்டு மக்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய தன்னுடைய பிசாசுகளுக்கு 25 இலட்சம் ரூபா செலவில் வீடமைத்து கொண்டிருக்கின்றார் மஹிந்த.எல்லோருமே தன் மக்கள் எனக்கூறும் மஹிந்த தமிழர்களுக்கு வீடுகட்ட சிங்களவர்களிடம் ஒரு ரூபா கேட்டால் என்ன? அப்படி கேட்டால் இன ஐக்கியம் வராதோ?தமிழ் மக்களிற்காக எதுவும் செய்ய முடியாது? தமிழர்க்காக சிங்களவரிடம் எதுவும் கேட்க கூடாது ஆனால் தமிழர்களின் கூரைகளில் எஞ்சி இருப்பதனையும் பிடுங்குவதற்கு மட்டும் ஒப்பந்தங்கள் போடலாமோ?

இப்படி என்றால் ஒரு கணக்கிற்கு கேட்டாலும் இன ஐக்கியம் எப்படி வரும்? மஹிந்த உண்மையில் இன ஐக்கியத்தை விரும்புபவர் அல்ல மஹிந்த மட்டும் அல்ல தென் இலங்கை ஆட்சியாளர் எல்லோரும் அப்படித்தான் இன ஐக்கியம் வந்தால் எப்படி அரசியல் நடாத்துவது? எல்லோருமே தன் மக்கள் எனக்கூறும் மஹிந்த தமிழர்களுக்கு இன்னமும் உதவமுன்வராதது ஏன்? தொடர்ந்தும் அடிமைகளாகவும், கைதிகளாகவும் தமிழர்களை வைத்திருப்பது ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக