வியாழன், 23 செப்டம்பர், 2010

ராஜபக்க்ஷாக்களின் தீவு?

ராஜபக்க்ஷ சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கும் இலங்கையுடன் விடயங்களை கையாள்வது தொடர்பாக முழு அளவிலான தந்திரோபாயத்தை இப்போது இந்தியா வகுத்துக்கொள்வது அவசியமானதாகும்.அதேசமயம், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுப்பொதி உட்பட அடிப்படை ஜனநாயக விதிமுறைகள் மற்றும் நோக்கங்களை இந்தியா மனதில் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் "எக்கனோமிக் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. ராஜபக்ஷாக்களின் தீவு? என்று மகுடமிட்டு  அப்பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
ஜனாதிபதியின் இரு தடவை பதவிக்கால வரையறையை அகற்றும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவதில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈட்டியிருக்கும் வெற்றி மற்றும் முன்னாள்
இராணுவத் தளபதியும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டவருமான சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் குற்றவாளியென்ற தீர்ப்பு ஆகியவை இலங்கையானது எதேச்சதிகார ஆட்சியின் சில வடிவத்துக்கு மெதுவாக நழுவிச் சென்று கொண்டிருக்கின்றது என்ற மிகவும் குழப்பகரமான விடயமாக காணப்படுகிறது. பழிவாங்குதல் குற்றச்சாட்டுகள் பொன்சேகாவின் விசாரணையின் வெளிப்படைத்தன்மையற்ற தன்மையும் இலங்கையிலுள்ள பொதுவான நிலைவரமும் உண்மையில் விடயங்களில் மிகவும் கருமையான நிழல்களை கொண்டுள்ளவையாகவுள்ளன. பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையானது ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக தற்போது காத்திருக்கிறது. தேசத்தின் தலைவர் என்ற ரீதியில் ராஜபக்ஷ தீர்மானிப்பதும் மன்னிப்பு வழங்குவதும் இப்போதும் சாத்தியமான விடயமாகும்.
ஆனால், ராஜபக்ஷவும் அவரின் குடும்பமும் இப்போது கட்டுப்பாடற்ற விதத்தில் அதிகாரத்தை பிரயோகிக்கின்றது என்ற உண்மையை மறைக்க முடியாது. அவர் விரும்பினால் பல தடவைகள் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்கு ராஜபக்ஷவுக்கு 18 ஆவது திருத்தம் இடமளிக்கிறது. முக்கியமான பதவிகளில் அவர் எவரை விரும்புகிறாரோ அவரை நியமிக்கும் அதிகாரத்தையும் வழங்குவதாக 18 ஆவது திருத்தம் உள்ளது.ஜனாதிபதி ஏற்கனவே படைகளின் பிரதம தளபதியாக பாதுகாப்பு,நிதி,திட்டமிடல்,துறைமுக,விமானசேவை அமைச்சராக இருக்கிறார். 8090 நிறுவனங்களுக்கு நேரடியான பொறுப்புகளைக் கொண்டவராகவும் உள்ளார். கரையோரக் காவல்படை,பொலிஸ்,புலனாய்வு, குடிவரவு,வனபரிபாலனம், பாராளுமன்ற சபாநாயகர் பதவி ஆகிய சகலவற்றினதும் கட்டுப்பாடு ஜனாதிபதியின் மூன்று சகோதரர்களிடம் உள்ளது. அரசாங்கத்தின் சகல விடயங்களிலும் இந்தளவிலான கட்டுப்பாட்டை ஒரு குடும்பம் கொண்டிருப்பது பீதியுணர்வை ஏற்படுத்துவதாகும். இந்தச் சகல அதிகாரங்களையும் ஒன்று சேர்க்கும் சிறப்புரிமைகளை ராஜபக்ஷ வைத்திருப்பதாகத் தென்படுவது நிலைமையை மோசமானதாக உருவாக்குகிறது. சிறுபான்மைத் தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்குத் தேவைப்படுகின்ற முக்கியமான மறுசீரமைப்புகள் தொடர்பான நடவடிக்கை விடயத்தில் இந்தச் சகல அதிகாரங்களையும் ஒன்று சேர்க்கும் சிறப்புரிமையை ராஜபக்ஷ கொண்டிருப்பது நிலைமையை மோசமானதாக உருவாக்குகிறதாகத் தென்படுகிறது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின்போதும் அதனைத் தொடர்ந்தும் சிறுபான்மைத் தமிழருக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பான உறுதிமொழி திரும்பத் திரும்ப வழங்கப்பட்டது.எதிரணி பிளவுபடுத்தப்பட்டதாகவும் குழம்பிப்போயிருப்பதும் அவசரகாலநிலை தொடர்வதும் பத்திரிகைகளை கருத்துத் தெரிவிக்கவிடாமல் தடுப்பதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளும் சர்வாதிகார ஆட்சியென்ற அச்சம் மறக்கப்பட்டுவிடக் கூடியதல்லவென்று தென்படுகிறது.ராஜபக்ஷ சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கும் இலங்கையுடன் விடயங்களைக் கையாள்வதற்கு இந்தியா இப்போது முழுஅளவிலான தந்திரோபாயத்øத் வகுத்துக்கொள்வது அவசியமாகும். தமிழர்களுக்கான அரசியல்தீர்வுப் பொதி உட்பட அடிப்படையான ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் நோக்கங்களை மனதில் கொண்டதான தந்திரோபாயத்தை தனது பங்கிற்கு இந்தியா இப்போது வகுத்துக்கொள்வது அவசியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக