செவ்வாய், 21 ஜூன், 2011

இன்று தலைவனின் அமைதியான நிலைக்கு நாமே பொறுப்பு, இந்த நிலையை நீக்குவதும் நமது பொறுப்பே............................

சேனல்4 வெளியிட்ட காணொளியில் புலிகளை மிக கொடுமையான போராட்ட குழு, கொடூரவாதிகள் என்று தெரிவிக்கிறார்கள். ஒரே சாட்சியமாக முகாம்களுக்கு நுழையும் முன் ஒரு வெடிகுண்டு வெடித்து நிறைய சிங்கள ராணுவமும், சில பொதுமக்களும் இறக்க நேரிட்டது. இதை புலிகள் தான் செய்தார்கள் என்று இராணுவம் கூறுகிறது. மக்கள் கூறவில்லை புலிகளும் மக்களை கொன்றார்கள் என நிரூபிக்க ஏதும் ஆதாரங்கள் எவரிடமும் உண்டா?







நிர்பந்தத்தின் பெயரால் சிலரின் பேட்டிகள் தவிர, அவர்கள் புரிந்ததாக கூறப்படும் தவறுகளை அடையாளப்படுத்த உண்மையான சாட்ச்சிகள் காணொளிகள் புலிகள்; மீது குற்றம் சாட்டுபர்களிடம் உண்டா? அறம், நெறி என்னும் தமிழரின் கோட்பாடுகளை கொண்ட ஒரே போராட்ட அமைப்பு தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே.




மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களின் வாழ்வுரிமைக்கு நெஞ்சுரம் கொண்டு போர் புரிந்து, இன்று வீராச்சாவை தழுவி நிற்கும் வீரத் தமிழர்களின் தரம் எங்களுக்கு தெரியும். விசக் குண்டுகளை இலங்கைக்கு விற்ற நாடுகளுக்கு எப்படி தெரியும் எங்கள் வீரம் என்னும் பொருள், போர் புரியும் அரண் பற்றி. அன்று தலைவன் பிரபாகரன் பார்த்துக் கொள்வான் என்று விட்டுவிட்டு, இன்று கொலையுண்ட சொந்தங்களுக்காக கதறி அழுவது நம் தவறு. நமக்கான கடமைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இன்று தலைவனின் அமைதியான நிலைக்கு நாமே பொறுப்பு, இந்த நிலையை நீக்குவதும் நமது பொறுப்பே.


இனி பிரபாகரன் போல ஒரு மாபெரும் வீரனை நம் வாழ்வில் காணப்போவது இல்லை. இந்த மாபெரும் தலைவனின் காலத்தில் உன் இனத்திற்கு விடுதலைக்கு நீயும் நானும் பாடுபடாது விட்டால், வேறு எவனும் அதை உனக்காக செய்ய மாட்டான். அடுத்தவர் செய்வார் என நீ காத்துக்கிடந்து காலம் கடத்தினால் உன்னை உன் உணர்வை என்னவென்று சொல்வது?




தலைவன் நமக்கு ஆயுதம் கொடுக்கவில்லை என்றாலும், போராட தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் எமது ஒன்றுபட்ட எழிச்சியையும் புரச்சியையும் கணக் காத்திருக்கிறான் எம் தலைவன். உருவாகப் போகும் ஈழத்தின் ஆணிவேரில் நீயும் நானும் கலந்திடுவோம். நமக்கான சூழல் இது தான், ஆயுதம் இல்லையேல் அறம், சனநாயகம். தமிழனே ஒன்று படு, ஈழம் வென்று எடு. தேசியத் தலைவரின் கைகளால் தமிழீழம் எங்கும் பட்டொளி வீச ஏற்றுவோம் எமது தேசியக்கொடியை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக