புதன், 29 ஜூன், 2011

தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இராணுவப் புலனாய்வாளர்கள்???

வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ ஆட்சி தொடங்கி பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது. சுதந்திரமாக இயங்கிய வன்னி வீழ்ச்சி அடைந்து இரு வருடங்களுக்கு மேலாகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் தாயகம் முழுவதும் இன்று அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டதை உணர முடியும்.



போர்க்காலத்திலும் சரி அதற்குப் பிந்திய காலத்திலும் சரி போரின் வலியைத் தாங்குபவர்கள் பொது மக்களே. வடக்கு கிழக்குத் தமிழர்களின் வரலாறு இதைத் தான் எடுத்துக் கூறுகிறது.
இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட யேர்மன், யப்பான் மக்கள் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்கள்.


பதினைந்து வருடம் சென்றாலும் இன்னும் அமைதி நிலைக்குத் தமிழர் வாழ்வு திரும்பவில்லை. இதற்கு இராணுவ ஆட்சி முதற் காரணமாக இடம் பெறுகிறது. வடக்கு கிழக்குத் தமிழர்களுக்கு இன்னும் சுதந்திரம் வழங்கப்படவில்லை. கிடைத்த சுதந்திரத்தையும் ஒட்டுமொத்தமாக இழந்து விட்டார்கள்.


இராணுவ ஆட்சியின் முக்கிய அம்சமாக தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இராணுவப் புலனாய்வாளர்கள் சர்வ வியாபியாக நுளைந்து விட்டார்கள். தமிழர்களுக்குப் பிரத்தியேக வாழ்வு கிடையாது. பிறர் அறியாமல் அவர்களால் ஒன்றையும் செய்ய முடியவில்லை.


இராணுவப் புலனாய்வாளர்களின் நுளைவு எல்லா மட்டத்திலும் காணப்படுகிறது. பொது வாழ்வில் ஈடுபடும் அனைவரும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றனர். அரச ஊழியர்கள் இராணுவக் கட்டுப் பாட்டில் பணியாற்றுகிறார்கள். பள்ளி நிர்வாகங்கள் இராணுவத்திற்குப் பதில் கூறும் நிலையில் இருக்கின்றன.


தமிழர்களுக்கு இராணுவத்தை விட இன்னும் சில எசமானர்கள் இருக்கிறார்கள். இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது போல் பாசாங்கு செய்தபடி தமது வயிற்றை வளர்க்கும் ஒட்டுக் குழுக்களின் அழுத்தங்களையும் மக்கள் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.


விடுதலைப்புலிகளை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு வந்து, காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டவர்கள் மக்களைத் தன் பக்கம் இழுக்க அரசை எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டு மக்களிடம் நெருங்கிப் பழகிச் சேகரிக்கும் தகவல்கள் இராணுவத்திடம் சென்றடைகின்றன.


யாரை நம்புவது, எப்படி வாழ்வது என்று தெரியாமல் தமிழர்கள் தவிக்கிறார்கள். உற்றார் உறவினர்களோடு பேசுவதற்கும் அஞ்சுகிறார்கள். உளவாளிகள் எங்கும் இருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக