திங்கள், 23 ஆகஸ்ட், 2010

இந்திய படையினரை நினைவுகூரும் முகமாக நினைவு மண்டபம்

சிறீலங்காவின் வடக்கு – கிழக்கு பகுதியில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட இந்திய படையினரை நினைவுகூரும் முகமாக நினைவு மண்டபம் ஒன்றை சிறீலங்கா அரசு கொழும்பில் அமைத்துள்ளது.


1987 ஆம் ஆண்டில் இருந்து 1990 ஆம் ஆண்டு வரையில் வடக்கு – கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட இந்திய படையினரை நினைவுகூரும் முகமாக நினைவு மண்டபம் ஒன்றை சிறீலங்கா அரசு கொழும்பில் அமைத்துள்ளது.இந்த போரில் கொல்லப்பட்ட 1500 இந்திய படையினரின் பெயர் விபரங்கள் இந்த நினைவு மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், சிறீலங்காவுக்கான இந்திய தூதுவர் உட்பட பலர் இந்த மண்டபம் அமைந்துள்ள பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்ததாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக