புதன், 25 ஆகஸ்ட், 2010

மட்டக்களப்பிலிருந்து இளம் பெண்களை தென் பகுதிக்குக் கூட்டிச் செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்களை தென்பகுதிக்கு அழைததுச் செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. தென்னிலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதாகக் கூறி ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்களைச் சேர்ந்த சிலரால் இப்பெண்கள் அழைத்துச் செல்லப்படவிருந்தனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, மாங்கேணி, போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 35 இற்கும் மேற்பட்ட யுவதிகள் அண்மையில் மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்கு வாகனங்களில் கொண்டு வரப்பட்டனர். தென்னிலங்கையில் உள்ள ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்களைச் சேர்ந்த சிலரால் இவர்கள் அழைத்துவரப் பட்டனர். மட்டக்களப்பு படுவான்கரை பெரியபோர தீவுப்பற்று காளிகோயிலடிப் பகுதிக்குச் சென்ற தென்னிலங்கை ஆடைத்தொழிற் சாலை நிறுவனங்களைச் சேர்ந்த சிலர் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளார்கள் என்று

அங்கு சென்ற அவர்கள் ஆலயநிர்வாக சபைத்தலைவர், கிராமத் தலைவர் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி யுள்ளார்கள்.யுவதிகளுக்குத் தென்னிலங்கை ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக அவர்கள் கலந்துரையாடியுள்ளார்கள்.

இந்த வேலை வாய்ப்புக்கு இளைஞர்களை ஏன் ஈடுபடுத்த முயற்சிக்கவில்லை என அவர்களிடம் மக்கள் பிரதிநிதிகள் கேட்ட போது அதற்கு அவர்கள் ஆண்களை வேலைகளில் ஈடுபடுத்தமாட்டோம் என்று பதிலளித்துள்ளார்கள்.இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகள் இதற்குக் கடும் எதிர்ப்பைக் காட்டியதையடுத்து அவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.

எனவே, வடக்குக் கிழக்கு மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும். எமது யுவதிகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். ஆடைத் தொழிற்சாலை நிறுவனத்தின் நம்பகத் தன்மை எதுவும் தெரியாமல் பெண் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது மிகவும் ஆபத்தானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக