திங்கள், 20 செப்டம்பர், 2010

உல்லாச நகராக யாழ்ப்பாணம் திறந்து விடப்பட்டிருக்கிறது....

சந்தியில் நிற்பதும், மது அருந்துவதும், கையடக்கத் தொலைபேசியும்தான் எங்கள் சீவியம் என்றால் இந்த மண்ணில் நிகழ்ந்த தியாகங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போகும்  அன்புக்குரிய இளைஞர்களே! நாங்கள் முதலில் எங்களை அறிய வேண்டும்  குடாநாட்டில் எங்கு பார்த்தாலும் சிரழிகின்றது எமது தனித்துவமான கலை கலாச்சாரங்கள். "இயக்க நிலையில் சீராக இயங்கிய எமது பண்பாடு, கலாச்சாரங்கள் தற்போது இயக்கமற்ற நிலையில் சீரழிகின்றது". சரியான பாதை காட்டுவதற்கு முறையான ஆட்கள் இல்லாத நிலையில் மேய்பன் இல்லாத மந்தைகள் போல மாறிவிட்டது எமது  யாழ்ப்பாணம் பட்டினம் .
யாழ்ப்பாணம்  திறந்து விடப்பட்டிருக்கிறது எங்கும் அமைதி  பல வருடங்களாக நாங்கள் பயணிக்காத  பல வீதிகள் பாவனைக்கு வந்திருக்கிறது. ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குள் முடங்கிய அந்த காலம் போய் இப்போது பத்து மணிக்கும் வீதிஉலா வருகிறோம். கடைகள் இரவிரவாக யாபாரம், பஜாஜ் கொம்பனி, டாட்டா கொம்பனி, என்று பல கொம்பனிகள் படையெடுப்பு. எத்தனை நல்லவிடயங்கள் இத்தனைக்கு பின்னால் ஒழிந்து கொண்டிருக்கும் அந்த உண்மை மட்டும் வலிக்கிறது இவ்வளவும் எப்படி கிடைத்தது..... ? ஒன்று மண்டும் உண்மை எதோ ஒன்று எங்கள் ஆன்மாவில் ஒன்றிப்போயிருந்த ஒரு உணர்வு மட்டும் குறைகிறது. இந்த முறையும் நல்லூர் திருவிழா  ஆனால் அன்று போல் இல்லை என்னவோ சாமி இப்போது மட்டும் வெறும் கல்லாகத்தான் தோன்றியது .. நடக்கட்டும் காலத்தின் போக்கில் நாங்கள் என்ன செய்ய முடியும் எங்களுக்குத்தான் இப்படித்தான் வாழவேண்டும் என்று எதுவும் இல்லையே எப்படியும் வாழ்வோம் அதுதான் யாழ் மக்களின் சிறப்பு ............... எங்களுக்கு உழைத்து தின்பதிலும் பார்க்க பிச்சையெடுத்து தின்பது தான் ரொம்ப ருசிக்கும் யாழ்ப்பாணம் திறந்து விடப்பட்டிருக்கிறது எங்கள் ஊரிலும் இனி போதை மருந்து வரும் தீனா குரூப் வேட்டைக்காரன் குரூப் என பல குரூப் வரும். கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கனவே  AIDS நோயாளர்களின் எண்ணிக்கையில் நம்பர் 1 அக இருக்கும் இங்கு மீண்டும் AIDS வரும் எல்லாவற்றுக்கும் தானே திறந்து விடப்பட்டு இருக்கிறது இந்த பட்டினம் .
ஆபாசப் புத்தகங்கள் மற்றும் சீடீக்களின் விற்பனை, கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களின் பாவனை போன்றவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் படையினர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை படையினரே தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து தமக்கு நெருக்கமானவர்கள் மூலம் மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே விநியோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாகப் பணத்தினைப் பெற்றுக் கொள்ளும் யாழ்ப்பாண இளைஞர்கள் ஆடம்பரப் பிரியர்களாக மாறியிருப்பதாகவும் இவர்களில் பலர் கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துப் பாவனையை ஆரம்பித்திருப்பதாகவும் யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாண இளைஞர்கள் வழிதவறிப் போவதைத் தடுப்பதற்கு வெளிநாட்டிலுள்ள உறவினர்களும் இளைஞர் யுவதிகளுக்கு பெருமளவு பணத்தை நேரடியாக வழங்குவதும் ஒரு காரணம் எனக் குறிப்பிடும் ஆர்வலர்கள் பண விடயத்தில் சற்றுப் பொறுப்புடன் நடந்து கொள்வது புலத்திலுள்ளவர்களின் கடமை எனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.
காரைநகர் கசூரினாக் கடற்கரையில் உல்லாசப் பயணி களாக வரும் இளைஞர்கள் யுவதிகள் கலாசார சீரழிவு களில் ஈடுபடுவதாகவும் ஏனைய உல்லாசப் பயணி கள் பாதிக்கப்படும் வகையில் நடந்து கொள்வதாகவும் தெரியவருகிறது. தற்போது யாழ்.குடாநாட்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால இக் கடற்கரைக்கு வரும் உல்லாசப்பயணிகளின் தொகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில்த யாழ்.குடாநாட்டு உல்லாசப்பயணிகள் தென்னிலங்கை மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் என பலதரப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் இக்கடற்கரையில்  குவியும்   இக்காலத்தில் சில இளைஞர் யுவதிகள் கலாசார சீரழிவுகளில் ஈடுபட்டு  வருவதாக  ஏனைய  உல்லாசப்  யணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.இவர்கள் பலரதும் முன்னிலையில் மது அருந்துவதுடன்  வெற்றுப் போத்தல்களை உடைத்து மக்கள்  நடமாடும் இடங்களிலும் கடற்கரையிலும் வீசிவருவதுடன் ஏனைய உல்லாசப் பயணிகளை தகாத வார்த்தைகளால்  பேசுகின்றனர்.  குடும்பமாக தமது விடுதலைக் காலத்தை கழிக்க வரும் உல்லாசப் பயணிகள்  பல அசெளகரியங்களை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.
எத்தனையோ துன்பத்தின் மத்தியில் இன்னொரு இனத்தினால் பொருளாதார ரீதியில் அடிவாங்கி அடிவாங்கி களைத்துவிட்ட குடாநாட்டு மக்களை இவர்கள் மிகவும் நல்லவங்களாடா எவ்வளவு அடிவாங்கினாலும் பேசாமல் இருக்கிறாங்கள் என எண்ணி அடிக்காமல் விட்டு அட்டை போல் ஒட்டி இரத்தம் உறுஞ்ச நினைக்கும் பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு இரையாக செல்ல துடிக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற எவரும் இனி வரப்போவதில்லை. எமது இனத்தின் வீரப் போராட்டத்திற்கு உரம் போட்ட வெளிநாட்டு வாழ் தமிழச் சமூகம் தற்போது எமது இனத்தினை கலப்படப் பொருளாக்குவதற்கும் துணைபோக நிற்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது. "கொழுத்தாடு பிடிக்கும் கோவில் நிர்வாகங்கள்" "பண்பை இழக்கும் பாடசாலைகள்" " இவற்றுக்கு எல்லாம் முக்கியமான காரணம் வெளிநாடு வாழ் உறவுகள். ஏன் எதற்கு என கேட்காது தனது இரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் பணத்தினை தனது உறவும் உற்றாரும் ஊரும் நல்லா இருக்க அனுப்பும் பணம் இங்கே அவர்களை எவ்வாறு நாறடிக்கிறது என அவர்களுக்கு தெரியுமா?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக