புதன், 10 நவம்பர், 2010

ஒவ்வொரு தமிழனின் கடின உழைப்பில்தான் தங்கியுள்ளது ஈழத்தமிழரின் கையில் தமிழீழம் கிடைப்பது.!!!!

* மே 18க்கு முன் தழிழீழ விடுதலைப்போராட்டம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில் வீரத்தோடும் விவேகத்தோடும் களத்தில் நின்று போரடியது. ஆனால் மே18க்குப் பிறகு.... * தமிழீழ மண்ணில் ஈழத்தமிழர் படும் துயரத்தில் பங்கு கொள்ள புலம்பெயர் உறவுகள் சிலர் துடித்தநிலையில் தலைமைத்துவத்திற்காகப் போட்டி போட்டுக்கொண்டார்கள், சில பேராசை பேர்வழிகள்.....


* பெரியளவில் புலம்பெயர் மக்களின் பணத்தைச் சுருட்டியவர்கள் தலைமைத்துவத்திற்குச் சண்டையிடட்டும் நாம் ஏதோ சின்ன அளவில் முயல்வோம் என நேற்று முளைத்த சில காளான்கள்....







ஆண்ட இனம் மீண்டும் ஆள படைகொண்டு இனம்மீட்ட தமிழரின் படையை வீழ்த்திவிட்டதாக சிங்கள இனவாதம் உலகை நம்பவைக்க முயலும் இவ்வேளையில் ஒடுக்கப்பட்ட தமது இனத்திற்காகக் குரல்கொடுப்பதை விடுத்து தலைமைத்துவத்திற்காக தலைக்கனம் பிடித்து ஆடுகிறார்கள், சில புலம்பெயர்தமிழர்கள். இவர்களின் இச்செயலை கண்டு தலைக்குனிய வேண்டியவர்கள் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தழிழர் மட்டுமல்லர்; அனைத்துத் தமிழீழ உணர்வாளர்களும்தான்.


மே 18க்கு முன் தழிழீழ விடுதலைப்போராட்டம் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமையில் வீரத்தோடும் விவேகத்தோடும் களத்தில் நின்று போரடியது. ஆனால் மே18க்குப் பிறகு புரியாத புதிர்களாகக் காட்சியளித்த தமிழீழப் போராட்டத்தின் இறுதித் தருணம் சிலரின் மெய்முகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டின. தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப்புலிகளினதும் ஒரே தானைத்தலைவன் பிரபாகரன் என்றிருந்த உலகத்தமிழர்களிடையே மே18க்குப் பிறகு கேள்விக்குறியில் இருந்த தலைமைத்துவத்தில் தலைவர்கள் அனைத்துலகத்திலிருந்து திடீர் திடீரென முளைத்தார்கள். யார் இவர்கள் என்று திகைத்துப்போயினர் உலகத்தமிழர்.


தமிழீழ மண்ணில் ஈழத்தமிழர் படும் துயரத்தில் பங்கு கொள்ள புலம்பெயர் உறவுகள் சிலர் துடித்தநிலையில் தலைமைத்துவத்திற்காகப் போட்டிப் போட்டுக்கொண்டார்கள், சில பேராசை பேர்வழிகள். போட்டிப்போடுவது மாத்திரமன்றி காணும் இடங்களில் எல்லாம் முட்டிமோதி தமிழனின் மானத்தை நடுவீதிக்குக் கொண்டுவந்தார்கள். இதனைத் தட்டிக்கேட்க முற்பட்டவர்களுக்குத் துரோகிப் பட்டம் வழங்கப்பட்டது. அறியாத பெயர்களுடன் புலிகளின் பொறுப்பாளர்கள் எனப் பல அறிக்கைகள் வெளிவந்தன. புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிப் போரில் இறந்துவிட்டதாகவும் இனி கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தான் தலைவர் என கே.பி தரவு அணியினரால் புலிகளின் பெயரில் அறிக்கை விடப்பட்டது. இவ்வறிக்கை விடப்பட்டு சில நாள்களுக்குப் பிறகு கே.பி துரோகி எனவும் கஸ்ரோ எனப்பவர்தான் உண்மையான தலைவர் என இன்னுமொரு குழுவினரால் புலிகளின் பெயரில் அறிக்கை விடப்பட்டது. இவ்வாறு மாறி மாறி மாறுபட்ட கருத்துகளுடன் புலிகளின் பெயரில் பல அறிக்கைகள் வந்தன.


பெரியளவில் புலம்பெயர் மக்களின் பணத்தைச் சுருட்டியவர்கள் தலைமைத்துவத்திற்குச் சண்டையிடட்டும் நாம் ஏதோ சின்ன அளவில் முயல்வோம் என நேற்று முளைத்த சில காளான்கள் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தின் இணைப்பாளர், அனைத்துலகத் தொடர்பகத்தின் பொறுப்பாளர், ஒருங்கிணைப்பாளர் எனப் புலிகளினால் நியமிக்கப்படாத பல பொறுப்புகளுக்குத் தலைமை தாங்குவதாகத் தங்களைத் தாங்களே அறிமுகப்படுதிக் கொண்டார்கள். இதெல்லாம் எதற்காக? குழம்பிப்போயுள்ள மக்களை மீண்டும் குழப்பி, ஏமாற்றி அவர்களிடம் உள்ள கொஞ்சநஞ்ச பணத்தையும் சூறையாடி தங்களின் சுகபோக வாழ்க்கையை மேம்படுத்ததான்.


இனிவரும் காலங்களில் எல்லா தமிழர்களும் தலைவைரின் சிந்தனையின் கீழ் ஒன்றாகத் திரண்டு தமிழீழம் பெறுவதற்காகச் செயற்படுவதே தவிர மற்றவர்கள் மீது உள்ள வஞ்சகத்தில் மாறுபட்ட கருத்துகளுடன் புலிகளின் பெயரை பயன்படுத்தி அறிக்கை விடுவதும், தலைமைத்துவத்திற்காகப் போட்டிப்போடுவதும் தமிழீழம் பெறப் போராடும் எந்த ஈழத்தமினுக்கும் உரிய பண்பன்று. தமிழீழம் பெற பலர் பல வழிகளில் பாடுபட்டுவரும் இவ்வேளையில் தாய்மண்ணை விற்றுப் பணம் பிழைக்கும் சிலரின் செயற்பாட்டை அனைத்துத் தமிழர்களும் கண்டிக்க வேண்டும்; தண்டிக்கவேண்டும். இனியாவது இவ்வாறன தமிழீழ மண்ணுக்கு களங்கம் ஏற்படும் வகையில் எவர் நடந்தாலும் அவர்களை தமிழர்கள் முன் வெளிக்கொணர வேண்டும். அதற்காக கே.பி துரோகி, நெடியவன் துரோகி, கஸ்ரோ துரோகி, என ஒருவருக்கொருவர் வசைபாடிக்கொண்டு மோதிக்கொள்வதும் ஈழத்தமிழருக்கு விடுதலையும், விடிவும் வரப்போவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக