புதன், 8 டிசம்பர், 2010

மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானம். வந்தடைந்த ராஜபக்ச

இலண்டன் விஜயத்தின் போது எதிர்பாராத விதமாகச் சந்தித்த நெருக்கடிகளை அடுத்து அவசரமாக கொழும்பு புறப்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும் மலேசியாவுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்றையே கொழும்புக்குத் திசைதிருப்பி வந்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குழு வில் இடம்பெற்றிருந்த சிலர் போர்க் குற்றச் சாட்டின் பேரில் இலண்டனில் கைது செய்யப் படலாம் என்ற நிலை உருவாகிய உடனேயே அவர்கள் கொழும்புக்கு விமானம் ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் புறப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமா னம் மலேசியா ஊடாக கொழும்பு செல்வதாக இருந்தது.
மலேசியா செல்வதை தவிர்க்க விரும்பிய ஜனாதிபதியும் அவரது குழுவினரும் தமது செல் வாக்கை முழுமையாக பயன்படுத்தி விமா னத்தை மலேசியா செல்லாமல் கொழும்புக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்ட போது விமானத்திலிருந்த வெளிநாட்டவர்கள் பெரும் குழப்பம் அடைந்திருந்ததாக கூறப்படுகின்றது. சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் பொதுவாக லண்டனிலிருந்து கொழும்புக்கான தமது பயணத்தை மலேசியா ஊடாகவே மேற்கொண்டு வருகின்றமை வழமையாகும். இந் நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கண்டிப்பான உத்தரவையடுத்து விமானம் லண்டனிலிருந்து நேரடியாக கொழும்பை வந்தடைந்தது.
இக் குறிப்பிட்ட விமானத்தின் மார்க்கம் திடீரென மாற்றப்பட்டமையினால் விமானத் திலிருந்த பயணிகள் பெரும் குழப்பமடைந்தனர்.லண்டனிலிருந்து மலேசியாவுக்கான பயண நேரம் பத்து மணித்தியாலமாக இருக்கின்ற போதிலும் கொழும்பினூடாக மலேசியா செல்வதாயின் ஐந்து மணித்தியாலங்கள் மேலதிகமாக தேவைப்படும் என்பதாலேயே மலேசியா செல்லவிருந்த விமானப் பயணிகள் குழப்பமடைந்திருந்தனர்.இது தொடர்பில் தமது எதிர்ப்பையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜித்வாஸ் குணவர்த்தனவை, தொடர்பு கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்கு பயணம் செய்யும் பயணிகள் அனைவருக்கும் அவர்களுடைய பயணக் கட்டணத்தில் 50 சதவீத கழிவை வழங்குவ துடன் தேவையான உணவுப் பொருட்களையும் குடிபானங்களையும் பயணத்தின்போது வழங்குமாறு உத்தரவிட்டார். இதன் மூலம் பயணிகள் சமாதானப்படுத்தப்பட்டனர்.
இக்குழுவினரும் அவசரமாக கொழும்பைச் சென்றடைந்த போதிலும் அவர்களுடைய பயணப்பொதிகள் அனைத்தும் நான்கு நாட் களின் பின்னரே மலேசியாவிலிருந்து வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக