செவ்வாய், 4 ஜனவரி, 2011

செம்மணி நீரேரியில் இளைஞர் கும்பல் அட்டகாசம்

செம்மணி நீரேரியில் இளைஞர் கும்பல் ஒன்று மது போதை யில் அரைகுறை ஆடைகளுடன் நீராடியதுடன் வீதியில் வாகனங்களில் சென்றவர்களுடனும் சேஷ்டை விட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் அசௌ கரியங்களுக்கு உள்ளாகினர்இந்த இளைஞர்களில் பலர் யாழ்.நகரில் கஸ்தூரியார் வீதிப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சிறிய ஹன்ரர் வாகனம் ஒன் றில் வந்து இவர்கள் செம்மணி யில் ஏ9 வீதியில் உப்பளப் பக்கம் இருந்து மறுபக்கமாகப் பாய்ந்த வெள்ள நீரில் அரை குறை ஆடைகளுடன் இறங்கிக் குளித்தனர்.

இவர்கள் தண்ணீரில் நின்ற படி வீதியில் சைக்கிளில் சென்ற யுவதிகளையும், பஸ்ஸில் சென்ற யுவதிகளையும் தகாதவார்த்தைகளால் திட்டினர். வாகனங் களின் குறுக்கே பாய்ந்தும் மறித்தும் சண்டித்தனத்திலும் ஈடு பட்டனர். உள்ளாடைகளுடன் சில சமயம் அதுவுமின்றித் தண் ணீரில் இருந்து எழுந்து வந்த இவர்களின் அட்டகாசம் தாங்க முடியாததாக இருந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்த வர்கள் தெரிவித்தனர்.மேற்படி வீதியால் சென்ற பெண்கள் என்ன செய்வது எனத் தெரியாது கலக்கத்துடன் தலை குனிந்தவாறு சென்றதனையும் அங்கு அவதானிக்க முடிந்தது. கும்பல் தமக்குத்தாமே சண்டையிட்டு விட்டு பின்னர் வாகனத்தில் ஏறிச் சென்றது.
இதே நேரம் இவர்களின் இந்த அநாகரிகச் செயலைக் கண்டு புத்திமதி சொல்லப்போன பெரி யவர் ஒருவர் வாங்கிக் கட்டிக் கொண்டார். பின்னர் அவர்களிடம் இருந்து விடுபடுவதே அவருக்குப் பெரும் பாடாகிப் போனது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக