ஞாயிறு, 21 மார்ச், 2010

கடும் சுறாவளி தாக்குதல்

வடகிழக்கு அவுஸ்திரேலியாவில் வீசிய கடும் சுறாவளி காரணமாக அங்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சுமா‌ர் 60 ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌வீடுக‌ளி‌ல் ‌மி‌ன் இணை‌ப்பு து‌ண்டி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.அவுஸ்திரேலியாவின் ஆ‌‌ர்லி கடற்பகுதியில் உருவாகியிருந்த உல்யூ (Ului) புயல் இன்று காலை 200 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்துள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது வீசிய சுறாவளிக் காற்றில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மரங்களும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. கடற்கரையில் இருந்த பல படகுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான 'கிரேட் பேரியர் ரீஃப்' எனும் இடத்தில் உள்ள சுமார் 60,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஆஸ்ட்ரேலிய அமைச்சர் நீல் ராபர்ட்ஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக