ஞாயிறு, 21 மார்ச், 2010

தெளிவு இன்னமும் தேவை.............

யாழ் குடா நாட்டின் சில புத்தி சீவிகள், சம்பந்தன் தலைமையிலான குழு, சில ஊடகவியலாளர்கள் ,பத்திரிகை நிறுவனம் தம்மால் இயன்றளவு இணக்க அரசியலுக்கு விளக்கம் கொடுத்து வருகின்றனர். அதாவது தருவதை கேட்டு பெற்றுக்கொண்டு பிரச்சினை இல்லாமல் இர்க்க பார்ப்போம் என்பதற்குத்தான் எத்தனை நியாயப்பாடுகளை பொழிந்து தள்ளுகின்றன. இன்று ஒரு பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கமும் எதேதோ புள்ளி விபரங்களை போட்டு எழுதியுள்ளனர். அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தாயகம் பறிபோவதாகவும் அதனை காப்பாற்றத்தான் சம்பந்தரின் இணக்க அரசியல் என்றும் மறு வளமாக சம்பந்தர் சொல்வதன்படி செய்யாது போனால் அதாவது தமிழீழம் என்று புலம்பெயர்ந்தவர்களும், ஏனையோர்களும் உறுதியாக நிற்பதனால் தாயகம் முற்றாக பறிபோகும் என திருகோணமலை மாவட்ட இனவீதாசார மாற்றம் , கந்தளாய் கல்லோயா திட்டம் என்பவற்றை குறிப்பிட்டு காட்டுகின்றனர். அதாவது அவர்கள் குறிப்பிட்ட புள்ளி விபரங்கள் வருமாறு: கந்தளாய், கல்லோயா, மகாஓயா, தீகவா பித் திட்டங்களை உருவாக்கி திருகோண மலை, அம்பாறை மாவட் டங்களில் சிங் களக் குடியேற்றங்களை உருவாக்கினர். கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடி யேற்றங்களை உருவாக்கிய அதேவேளை, சிங்களவர்களின் சனத்தொகை கிழக்கில் அதிகரிக்கும் வகையில் திருகோணமலை மட்டக்களப்பு மாவட் டங்களின் எல்லை களிலும் மாற்றங்களையும் உருவாக்கினர். மட்டக்களப்பு மாவட்டம் எவ்வாறு பிரிக்கப்பட்டு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டம் உருவாக்கப்பட்டது என்ப தைப் பின்னர் பார்ப்போம். திருகோணமலை மாவட்டம் முல் லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கு எல்லை யான தென்னமரவாடியிலிருந்து மட்டக் களப்பு மாவட்டத்தின் மேற்கு எல்லை யான வெருகல் ஆறு வரை யான நீண்ட கரையோரப் பிரதேசமாகும். இதன் தெற்கு எல்லையாக அனுராதபுரம், பொலன்ன றுவை மாவட்டங்கள் உள்ளன. 1827ஆம் ஆண்டில் திருகோணமலை மாவட்டத்தில் 250 சிங்கள வர்கள் மட் டுமே வாழ்ந்தனர். அப்போது தமிழர்கள் 15 ஆயிரத்து 663பேராக வும், முஸ்லிம்கள் 3 ஆயிரத்து 245 பேராகவும் காணப்பட்ட னர். இம் மாவட்டத்தின் மொத்த சனத் தொகையில் தமிழர்கள் 81.76 வீதமாகவும், முஸ்லிம்கள் 16.9 வீதமாகவும், சிங்கள வர்கள் 1.3 வீதமாகவும் காணப்பட்டனர். 1921ஆம் ஆண்டில் தமிழர்களின் சனத்தொகை 54.4 வீதமாக வீழ்ச்சி யடைந்த அதேவேளை, முஸ்லிம்க ளின் சனத்தொகை 37.6 வீதமாகவும், சிங்க ளவர்களின் சனத்தொகை 4.4 வீதமாக வும் உயர்வடைந்திருந்தது. 1971 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சனத்தொகை முடிவுகள் சிங்களக் குடி யேற்றம் மற்றும் முஸ்லிம் களின் சனத் தொகை அதிகரிப்பு என் பனவற்றை தெளிவாகக்காட்டியிருக் கிறது. அந்த ஆண்டின் குடித்தொகை மதிப்பீட்டின்படி திருமலை மாவட் டத்தில் தமிழர்கள் (71 ஆயிரத்து 749 பேர்) 38.1 வீதமாகவும் முஸ்லிம்கள் (59 ஆயிரத்து 924 பேர்) 31.8 வீத மாகவும், சிங்களவர்கள் (54 ஆயிரத்து 744 பேர்) 29.08 வீதமாகவும் காணப்பட்டனர். திருகோணமலை மாவட்டத்தில் 1.3 வீதமாக இருந்த சிங்களவர்கள் கடந்த ஆண்டில் குடித்தொகை மதிப்பீட்டின் படி 30 வீதமாகவும், 16 வீதமாக இருந்த முஸ்லிம்கள் 46.5 வீதமாகவும் உயர்வ டைந்திருக்கிறார்கள். 81.76 வீதமாக இருந்த தமிழர்கள் 23.5 வீதமாக வீழ்ச்சி யடைந்திருக்கிறார்கள். இங்கு இவர்கள் குறிப்பிடும் புள்ளிவிபரங்கள் புலம்பெயர்மக்களும் தமிழீழம் என்று சொல்வதனாலோ அல்லது கடின போக்காளர்களினாலோ உண்டாகியதா? இந்த காலப்பகுதியில் தற்போது மீண்டும் இணக்க அரசியல், இந்தியா அனுசரணை, என்று சப்புக்கொட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றி சந்தர்ப்பவாத அரசியல் பேசும் தலைவர்கள் இருந்த காலத்திலேதான் நடந்தது. ஆகவே மேற்கூறப்பட்ட விடயங்கள் நடந்தேறிய வேளை இந்த தலைவர்களும் அவர்களை வால்பிடித்து எம்.பி பதவியினை பெற்று தமது வியாபாரத்தினை பெற துடிக்கும் முதலாளிகளின் குடும்பங்களும் என்ன செய்தார்கள்? இப்போ இந்தியாவின் உதவியுடன் தான் எல்லாவற்றையும் செய்யலாம் அல்லது தாயகம் பறிபோவதனை காப்பாற்றலாம் என்று கூறுகின்றவர்கள் அன்று இந்தியாவுடன் இப்போது இருந்ததனை விட அன்னியோன்னியமாக இருந்தவேளை ஏன் தாயகம் பறிபோவதனை தடுக்க முடியாது போனது. தாயகம் பறிபோகும் வேளை இந்திய இலங்கை அரசியல் சூழல் எலியும் பூனையுமாக இருந்தவேளை புத்திசாலி தலைவர்கள் சாதித்து இருக்கலாம் அல்லவா? சிங்கள அரசாங்கம் தான் நினைத்தவற்றை கச்சிதமாக செய்து வருகின்றது. அதனை தமிழர்கள் காலங்காலமாக எதிர்த்து வந்திருக்கின்றார்கள். சிங்கள குடியேற்றத்தினை ஆகவே யதார்த்தம் என்னவெனில் யாரும் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஆயுத போராட்டத்தின் மூலம் குடியேற்றங்கள் ஓரளவு தடுக்கப்பட்டன மேலும் சில குடியேற்றங்கள் அகற்றப்பட்டன என்பதே உண்மை. ஆகவே ஒவ்வொருவரும் தமது சுய நோக்கங்களுக்காக வரலாறுகளையும், தடங்களையும் பாவிப்பதனை நிறுத்திவிட்டு, குற்றம் சுமத்துவதனை நிறுத்தி ஒவ்வொருவரும் கூட்டாக சேர்ந்து எப்படி, எதனை செய்யலாம் என திட்டமிடவேண்டும். இல்லையேல் விட்டுவிடவேண்டும். திரும்ப திரும்ப ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி தமிழர்களுக்குள் தமிழர்கள் சண்டைபிடித்து எதிரிக்கு அனுகூலமான சூழல்களை ஏற்படுத்தி கொடுப்பதனை தவிர்க்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக