சனி, 8 மே, 2010

தமிழ் மக்களின் வலிசுமந்த மாதம் - கொண்டாட சிங்களதேசம் தயாராகின்றது

தமிழ் மக்களின் ஆயுதப்போரை முறியடித்த ஆண்டு விழாவை பெருமெடுப்பில் கொண்டாடுவதுடன்
வடக்கு – கிழக்கு பகுதிகளில் பெரும் படைத்தளங்களையும் அமைப்பதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக தென்னிலங்கை நாளேடு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த வருடம் மே மாதம் நந்திக்கடல் அருகில் ஈழத்தமிழ் மக்களின் ஆயுதப்போராட்டம் படை பலம் கொண்டு முறியடிக்கப்பட்டதின் ஓராண்டு நிறைவை பெரும் எடுப்பில் கொண்டாடுவதற்கு சிறீலங்கா தேசம் தயாராகி வருகின்றது. படைத்தரப்புக்கு முதன்மை அளிக்கப்படும் இந்த விழாவில் படையினருக்கான பல நினைவு மண்டபங்கள் அமைக்கப்படுவதுடன், விடுதலைப்புலிகளின் நிiனைவாலயங்களை அனைத்தும் அழிக்கப்படுகின்றன. மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தொடர்ந்தும் படையினரின் பிடிக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடன் அங்கு பாரிய படை தளங்களை நிரந்தரமாக நிறுவுவதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வன்னியில் ஆரம்பிக்கப்பட்ட போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முல்லைத்தீவின் கிழக்கு கரையில் நிறைவடைந்திருந்தது. சிறீலங்காவின் படை பலத்தின் கணிசமான தொகையினரை வன்னி பகுதியில் நிலைகொள்ள வைக்கவே அரசு விரும்புகின்றது. அதங்காக அங்கு இராணுவ மற்றும் வான்படை தளங்களும், பயிற்சி தளங்களும் விரிவாக்கப்பட்டு வருவதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக