திங்கள், 14 ஜூன், 2010

இன்று சேகுவேராவின் 82 வது பிறந்த தினம்

ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காக உழைத்த புரட்சித் தலைவர்களுள் ஒருவரான செகுவராவின் 82ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி பிறந்த இவர், 1959இல் கியூபாவை மீட்டவர் என்ற வகையில் போற்றப்படுகின்றார்.

பிடரல் காஸ்ட்ரோவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட இவர், இடது சாரிக் கருத்துக்களால் கவரப்பட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செயல்படுவதில் தீவிரம் காட்டியவராவார். இளைஞர்கள் மத்தியில் இவர் பெரிதும் போற்றப்பட்ட ஒருவர். இவர் இளைஞராக இருந்த காலத்தில் ஆர்ஜென்டினாவில் உதைப்பந்தாட்டம் மற்றும் றக்பி என்பவற்றில் பிரபலம் பெற்றிருந்தார்.

தற்போதைய உலகில் ஒடுக்கப்படும் மக்களிற்கான போராட்டங்கள் பெரும்பாலானவை எவ்வாறு பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்படுகின்றதோ அதே போலத்தான் சேகுவேரா காலத்தில் உலகத்தில் எங்கு பிரச்சினைகள் நடந்தாலும் அது சேகுவேரா புரட்சி என ஆட்சியாளர்களால் வர்ணிக்கப்பட்டது. இது ஒருவகையில் சேகுவேராவின் நோக்கத்திற்கு சேறுபூசும் வேலையாகவும் இருந்தது.

என்றாலும் சேகுவேராவின் உண்மையான மக்களிற்கான விடுதலை என்ற கொள்கை நாளடைவில் விரிவடைந்து இன்று வரை இளைஞர்களிடையே நீங்காத இடத்தை பிடித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக