திங்கள், 14 ஜூன், 2010

இணைந்த வட கிழக்கு அடிப்படையில் தீர்வு அமைய வேண்டியது அவசியம்....

இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமையுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கி தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க அரசாங்கம் முன்வருமாயின் அதற்கு ஆதரவளிக்க தயார்.
ஆனால்
தமிழர்களின் பூர்வீகத்தை உள்நாட்டு அரசாங்கம் இனவாத அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது என்று இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.

இலங்கை தேசியப் பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா சுயநலமாக செயற்படக்கூடாது. அதேபோன்று இணைக்கப்படாத வடக்கு கிழக்கிற்கு வழங்கப்படும் தீர்வுகள் பயனற்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு கூறினார். இவர் தொடர்ந்தும் கூறுகையில், இலங்கை வாழ் தமிழர்களின் பூர்வீகமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதனடிப்படையில் இப்பிரதேசங்களுக்கு சுயநிர்ணய உரிமைகளுடன் கூடிய அதிகாரங்களை சட்டபூர்வமாக வழங்கப்படல் வேண்டும்.

வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்காது அரசாங்கம் தீர்வுத் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாயின் அதற்கு தமிழ் அரசியல் தலைமைத்துவமோ சர்வதேசமோ இடமளிக்ககூடாது. 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாணச் சபை முறைமை தற்போதும் நடைறையில் உள்ளது. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டமையினாலேயே அம்முறை பயனற்றுப்போயுள்ளது. இலங்கையின் தேசியப் பிரச்சினையில் உள்நாட்டு அரசாங்கம் நம்பகத் தன்மையை பாதுகாத்துக் கொள்ளவேண் டும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக