வெள்ளி, 25 ஜூன், 2010

உளவு பார்த்த புலி உறுப்பினர் மாத்தறையில் கைது!

மாத்தறையில், யாசகர் வேடத்தில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முக்கிய அரசியல்வாதிகள் தொடர்பில் உளவு பார்க்கும் நோக்கில் குறித்த விடுதலைப் புலி உறுப்பினர் மாத்தறை நகரிற்கு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



கைது செய்யப்பட்ட நபர் சார்ள்ஸ் அன்ரனி படைப் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், சில தினங்களுக்கு முன்னர் மற்றுமொரு புலி உறுப்பினர் மாத்தறையில் கைது செய்யப்பட்டிருந்தார்.


ஜனாதிபதி மற்றும் முக்கியஸ்தர்களின் பயணங்கள் தொடர்பில் உளவுப் பணியில் ஈடுபடும் நோக்கில் குறித்த புலி உறுப்பினர்கள் மாத்தறைக்கு சென்றிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.


35 வயதான ஈஸ்வரன் சந்திரகுமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த சந்தேக நபர் ஒரு காலை இழந்துள்ளதாகவும், படைத்தரப்பினருடன் நடைபெற்ற மோதல்களின் போது பாதம் இழக்கப்பட்டிருக்கலாம் எனவும் திவயின செய்தி வெளியிட்டுள்ளது.


கடந்த 20ம் திகதி குறித்த நபர் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக