வெள்ளி, 25 ஜூன், 2010

நீதிபதிகள் இடமாற்றப்படுவது நீதித்துறைக்கு உகந்ததல்ல!

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கலாசார சீரழிவு என்பன நடைபெற்றுவருகின்றன. எமது சொந்த தமிழ் உறவுகளும் இப்படிப்பட்ட சமூக சீரழிவு நடவடிக்கைகளில் நேரடியாகவும் மறைகமாகவும் ஈடுபட்டிருக்கின்றன என்று கேள்விப்படும்போது மனதுக்கு வேதனையாகவுள்ளது என முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சமூக சீரழிவு நடவடிக்கைகளை துணிச்சலுடன் கண்டிக்கவிளையும் அல்லது தட்டிக்கேட்கும் நீதிபதிகள் திடீரென இடமாற்றம் செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கின்றது. தமிழ் மக்கள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகி இனியாவது விடிவு காலம் வருமா சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்படுமா, நீதிகிடைக்குமா என்று அங்கலாய்க்கின்ற வேளையில் துணிச்சலுடனும் உண்மையாகவும் செயற்படும் நீதிபதிகள் குற்றம் புரிந்தவர்கள்போல் இடமாற்றம் செய்யப்படுவது நீதித்துறைக்கு உகந்ததல்ல என்றும் அவர் கூறினார்.


காலஞ்சென்ற சட்டத்தரணி எஸ்.ஆர். கனகநாயகத்தின் உருவப்பட திரைநீக்கம் நேற்று யாழ்ப்பாணம் சட்ட நூலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உருவப்படத்தினை திரைநீக்கம் செய்த பின்னர் உரையாற்றுகையிலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.


இங்கு அவர் மேலும் கூறியதாவது: குடாநாட்டில் சமூக சீரழிவு நடைபெறுகிறது. தெற்கிலிருந்து வரைவின்மகளிர்கள் கொண்டுவரப்பட்டு எமது இளைஞர்களுக்கு வலைவிரிப்பதாகவும் கேள்விப்பட்டேன். அத்துடன் போதைப் பொருட்கள் கல்விக்கூடங்களுக்கு அருகில் விற்பனைக்கு விடப்படுவதாகவும் அறியக்கிடைத்தது.


எமது சொந்த தமிழ் இரத்தங்களும் இப்படிப்பட்ட சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் நேரடியாகவும் மறைகமாகவும் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று கேள்விப்படும்போது மனதிற்கு வேதனை அளிக்கின்றது. சமூகச் சீரழிவு நடவடிக்கைகளைத் துணிச்சலுடன் கண்டிக்க விளையும் அல்லது தட்டிக் கேட்கும் நீதிபதிகள் திடீர் என இடமாற்றம் செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கின்றது.


தமிழ் மக்கள் சொல்லொண்ணா துயரங்களிற்கு ஆளாகி இனியாவது விடிவு காலம் வருமோ, சட்ட ஒழுங்கு நிலைநிறுத்தப்படுமோ, நீதிகிடைக்குமோ என்று அங்கலாய்க்கும் வேளையில் துணிச்சலுடனும் உண்மையாகவும் செயற்படும் நீதிபதிகளைக் குற்றம் புரிந்தவர்கள் போல் இடமாற்றம் செய்வது நீதித்துறைக்கு உகந்ததல்ல.


எனினும் இந்த அழிவில் இருந்து குடாநாட்டை மீட்பதற்கு சட்டத்தரணிகள், நீதிபதிகள் ஆகியோரின் ஒன்றிணைந்த, ஒருமித்த, ஒற்றுமைமிக்க, துணிச்சலான பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. நீங்கள் யாவரும் துணிந்து நின்று சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டி நடைமுறைப்படுத்துவதன் மூலம் இப்படிப்பட்ட வெளியார் தாக்குதல்களை சமாளிக்கலாம்.


உங்கள் நாடு, உங்கள் பிரதேசம், உங்கள் கலாசாரம், உங்கள் பாரம்பரியம் இவை பறிபோகின்றன என்றால் நீங்கள் வாளாதிருக்கலாமா? பின்னணியில் வன்முறையைக் கையாள்பவர்கள் இருக்கின்றார்கள், அவர்களுக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் துணை போகின்றார்கள் என்று பயந்து சட்ட நடவடிக் கைகளைச் செய்யாது அல்லது எடுக்காது இருக்கக்கூடாது.


எமது சூழலில் இன்று நடப்பவை நீதிமன்றங்களில் பிரதிபலித்தால்தான் வேற்று நாட்டவர் கூட அவற்றை கவனத்திற்கு எடுப்பர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக