வியாழன், 10 ஜூன், 2010

மஹிந்த இணக்கம்?!



இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு இசைவாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வு ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளாராம்.



சிறுபான்மை இன மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக அவர்களின் பிரதிநிதிகளூடாகத் தாம் பேச்சுவார்த் தையை ஆரம்பித்துள்ளதாகவும், 13ஆவது திருத்தத்தை உள்ளடக்கிய தீர்வைக் காண்பதே தமது இலக்கு என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்கு றுதியளித்தார்.
போரினால் இடம்பெயர்ந்த மக்களைத் துரிதமாக மீளக்குடியமர்த்த வேண்டும் என்ற டெல்லியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட மஹிந்த அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றாராம்.


இதேவேளை வடக்கு, கிழக்கைச் சேரந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு 50,000 வீடுகளைக் அமைத்துக்கொடுப்பதற்கு இந்தியா வாக்குறுதி அளித்துள்ளது. நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக