புதன், 14 ஜூலை, 2010

ஜூலை 14- பிரெஞ்சுப் புரட்சி


1789பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.

"போராட்டமே பொதுமக்களின் திருவிழா" - லெனின்.


ஒவ்வொரு எழுச்சிக்கும், மக்களின் போராட்டத்திற்கும், புரட்சிக்கும் தூண்டுதலாக,
வடிகாலாக அமைவது சிலரின் உணர்வு பூர்வமான பேச்சுகளும், எழுத்துக்களும், வழிகட்டுதலுமே. பாஸ்டின் சிறைச்சாலைத் தகர்க்கப்பட்டதற்கும் ரோட்டோ, ரூசோ, மண்டேச்க்யு போன்ற அறிஞர்களின் எழுத்துக்கள் காரணங்களாக அமைந்தன.


1789 சூலை 14 -ஆம் நாள் காலை 80,000 பேர் கொண்ட மக்கள் கூட்டம் விடுதி தி இன் வேலிடேஸ் (Hotel De Invalides ) என்ற இடத்தில் அமைந்த படைகள் கொட்டிலை சூறையாடியது. 32 ஆயிரம் துப்பாக்கிகளையும், 12 தகரிகளையும், கொஞ்சம் வெடிமருந்தையும் கைப்பற்றினர். அதே போராட்ட உணர்வோடு அடுத்த சில நிமிடங்களில் பாஸ்டின் சிறைச்சாலையையும் தகர்த்து எறிந்தார்கள்.


100 அடி உயரமும், 12 அடி அகலமும் கொண்ட பாஸ்டின் சிறைச்சாலைச் சுவர் அடிமைத்தனத்தின் சின்னமாக, வலுவாக அமைந்திருந்தது. ஆனால் ஒன்றுபட்ட மக்களின் எழுச்சியும், போராட்ட உணர்வும், செயல்பாடுகளும் அடக்குமுறைச் சின்னங்களையும் தகர்த்தெறியும்


நிகழ்வுகள்
1223 - எட்டாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.


1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.


1865 - எட்வர்ட் வைம்ப்பர் தனது உதவியாட்களுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மாட்டர்ஹோர்ன் மலையின் உச்சியை முதற்தடவையாக எட்டினார். இவர்கள் திரும்பி வருகையில் இவருடன் வந்த 4 பேர் உயிரிழந்தனர்.


1889 - பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்ற" நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.


1933 - ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.


1948 - இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி பாராளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.


1958 - ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.


1965 - மரைனர் 4 செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.


1966 - குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.


1967 - நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.


1989 - பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.


1995 - MP3 பெயரிடப்பட்டது.


1995 - இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.


1997 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபா வந்தடைந்தன.


2002 - பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.


2007 - ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.


பிறப்புகள்
1929 - வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியல் அறிஞர்.
1943 - ரோகண விஜயவீர, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், புரட்சியாளர் (இ. 1989)


இறப்புகள்
1827 - அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788)
1998 - டிக் மக்டொனால்ட், மக்டொனால்ட் நிறுவன தாபகர் (பி. 1909)
2008 - சுசுமு ஓனோ, ஜப்பானியத் தமிழறிஞர் (பி. 1919)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக