புதன், 14 ஜூலை, 2010

அக்கராயன்குளம் நீர் விநியோகம் படையினரால் தடை!

கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குளம் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான நீர் விநியோகம், இராணுவத்தினரால் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதியின் பிரதான நீர் வழங்கும் இடமாக அக்கராயன்குளம் காணப்படுகிறது.



இங்கு குடியமர்த்தப்பட்ட பொது மக்கள் தமது குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு இந்த குளத்தையே நம்பியுள்ளனர். எனினும் தற்போது இராணுவத்தினர் நீர் விநியோகத்துக்கு தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதனை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்கு, நீர் தாங்கிகளின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.


இந்த நிலையில், இராணுவத்தினரின் குடிநீர் பாவனைக்காக இந்த குளத்து நீர் பயன்படுத்தப்படுவதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.


இதன் காரணமாகவே கிளிநொச்சியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் வழங்கல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.


அத்துடன் அங்கு குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை கைவிட வேண்டி சூழ்நிலைக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அவர்கள் தமக்கான வாழ்வாதார பின்னடைவையும் சந்திக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக