செவ்வாய், 27 ஜூலை, 2010

கோத்தபாயாவின் கைகளில் காவல்துறையின் நான்கு பிரிவுகள் !

காவற்துறை திணைக்களத்தின் 4 முக்கிய பிரிவுகளான விசேட அதிரடிப்படை, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு ஆகியன பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
வினால் நிர்வகிக்கப்படுவதுடன் தன்னை தவிர வேறு எவருடைய உத்தரவுகளையும் பின்பற்ற வேண்டாம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் மேற்கூறிய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் காவற்துறையின் உயர் அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்


பயங்கரவாத தடுப்பு பிரிவு, குற்றப்புலனாய்வுப் பிரிவு, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு என்பன இதுவரை
காலமும் காவற்துறை மா அதிபரின் நிர்வாகத்திலேயே இயங்கி வந்தன.


விசேட அதிரடிப்படை பிரிவு சிறிது காலம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கியதுடன் நிர்வாக நடவடிக்கைகளை மாத்திரமே பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வந்தது.


இந்த நிலையில் தற்போது குறித்த 4 முக்கிய பிரிவுகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள கோத்தபாய இதன் பொறுப்பதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவுகளை பிறப்பிப்பதுடன், நிர்வாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக