செவ்வாய், 27 ஜூலை, 2010

வீரவணக்கம் -மேஜர்- தேவன் (அம்பாறை மாவட்டம்)

அம்பாறை மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர்.2005 ம் ஆண்டின் பிற்பகுதியில்
இயக்கத்தில்இணைந்து கொண்டு லெப்.கேணல் மாருதியன் படையணியில் செயற்பட்டார்.போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து 4ம் கட்ட
யுத்தம் ஆரம்பித்த போது வனம் முழுவதும் போர்களமாகமாறியது.





எமது இருப்பிடங்கள் அடிக்கடி இடமாறின. நிரந்தரமென எதுவுமேயில்லாது,கெரில்லா
பாணியிலான போர்முறையும், வாழ்வு முறையும், கடைப்பிடித்த அக்காலப்பகுதியில் தாக்குதல் பணியை
விட உணவினை சேகரித்து பெற்றுக்கொள்ளும் பணியே மிகக்கடினமாக இருந்தது.துரோகத்தனங்கள்
மலிந்து போன மண்ணில் முகங்களை மறைத்தபடி, விடுதலையுணர்வை மனதில் சுமந்தபடி எமக்கான
மக்களை இனம்கண்டு அவர்களூடாக பெறுகின்ற உணவு பொருட்களை எந்த சேதாரமும் இல்லாமல்
பத்திரமாக பல இடங்களிலும் சேமிக்க வேண்டியபெரும் பணியை செய்தவர்களில் தேவனுமொருவர்.
வயதை மீறிய வளர்ச்சிக்கப்பால் குழந்தை தனம் மாறாத புன்னகையுடன் திரியும் இவனின் மீது எல்லோருக்குமே அன்பு அதிகம். அவனது பொறுப்புணர்வும் வயதை மீறித்தானிருந்தது. தனக்கு வழங்கபட்ட பணியை எப்போதுமே நிறைவாக செய்துவிட வேண்டுமென்ற எண்ணமே இவன் மனதில் நிறைந்து நிற்கும். எம் அணிகளிற்கான பாதை வழிகாட்டியாகவும்,பாதைகளின் அனைத்து விபரங்களையும் தன் அனுபவங்களினூடாக கற்றறிந்து அணிகளோடு வனத்திற்க்கு தேவையான பொருட்களை இலகுவாக கொண்டு வந்து சேர்க்கும் வேகம் எம் எல்லோரையும் வியக்க வைக்கும்.
எந்நேரமும் தோளில் துப்பாக்கியுடன் எதிரியின் பதுங்கி தாக்குதலை எதிர் கொள்ள வேண்டிய எதிர்பார்புடன் வனம் எங்கும் வழிகாட்டியாக சக போராளிகளின் தேவைகளை அறிந்து நிறைவு செய்யும் ஆசானாக, எந்த சலிப்புமின்றி இறுதி வரை வனத்தில் களமாடிய தேவன்.   எதிரியின் பதுங்கு தாக்குதலில்2008 ஜூலை மாதம் வீரகாவியமானான் 
கள போராளி 

1 கருத்து:

  1. மண்ணின் விதைகள்27 ஜூலை, 2010 அன்று AM 6:01

    கல்லறையில் விதைக்கும்போது கண்ணீர் பயணம்.. உந்தன் விடைபெறுதல் கண்டபோது பகையில் கோவம்.. வல்ல புலி என்று உன்னை காலம் போற்றும் எந்தன் வாழ்நாளும் உந்தன் கனவை சேர்ந்தே ஏற்கும் தோழா கனவை ஏற்கும்.. கண் மூடித் தூங்கும் எந்தன் தோழா கல்லறை திறந்து கொஞ்சம் வாடா..!!

    பதிலளிநீக்கு