செவ்வாய், 13 ஜூலை, 2010

பிறவிப் பயங்கரவாதி யாருமில்லை. அவன் உருவாகிறான், உருவாக்கப்படுகிறான், எப்படி?

9/11 பயங்கரவாதத் தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது என்பதில் ஐயமில்லை.அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளும் கொடுஞ் செயலை - சுட்டுத் தள்ளுகிறவர்களின் அரசியல் நோக்கம் எதுவானாலும் - கிஞ்சிற்றும் நியாயப்படுத்த முடியாது, கூடாது. அப்பாவிகளைச் சுட்டுத் தள்ளுவதன் மூலம்தான் ஓர் அரசியலை வளர்க்க முடியும் என்றால் அந்த அரசியல் முற்போக்கானதாகவோ மக்கள் சார்பானதாகவோ இருக்க வழியில்லை.

பயங்கரவாதக் கொடுஞ்செயல்களைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை. மீறி ஒரு பயங்கரவாதம் நடந்துவிடும் போது அதைச் செய்தவர்கள் மீதும் அதற்குக் காரணமானவர்கள் மீதும் சட்டப்படிக் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். எந்தப் பெயராலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதோ ஊக்குவிப்பதோ கூடவே கூடாது. அதே போது பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் என்பது பயங்கரவாதியைச் சுட்டுக் கொல்வதோடு அல்லது சிறையில் அடைப்பதோடு முடிந்து விடாது. பயங்கரவாதத்தின் அரசியல்-சமூக வேர்களைக் களைந்திட வேண்டும். பயங்கரவாதிகள் உருவாவதற்கான களத்தை இல்லாமல் செய்ய வேண்டும்.
பிறவிப் பயங்கரவாதி யாருமில்லை. அவன் உருவாகிறான், உருவாக்கப்படுகிறான், எப்படி? பயங்கரவாதியால் அப்பாவிகளின் உயிரை ஈவிரக்கமின்றி பறிக்க முடிவதோடு, தன்னுயிரையும் தயக்கமேதுமின்றி அழித்துக் கொள்ள முடிவது எப்படி? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். மீண்டு வர முடியாது என்று தெரிந்தே சாவுக் கூண்டிற்குள் விரும்பி அடியெடுத்து வைக்கிற மனிதர்களின் உளவியல் எத்தகையது? அவர்களது துணிச்சல் மட்டும் உண்மையான பகைவர்களுக்கு எதிரானதாக அமையுமானால், அது ஒரு போர் முறையாக - தற்கொடைப் போர் முறையாக - மதிக்கப்படும், அவர்கள் வீரர்களாகப் போற்றப்படுவார்கள்.
கரும்புலிகள் இத்தகைய தற்கொடைப் போராளிகளே. இவர்களின் ஈகமும் வீரமும் வானும் கடலும் உள்ள வரை வாழ்ந்திருக்கும்.
9/11 குறித்து பாலஸ்தீன ஹமாசு இயக்கத்தின் ஆன்மிகத் தலைவர் சேக் அகமது யாசின் கூறியது ஈண்டு நினைவுகூரத் தக்கது: "எமது இயக்கம் இசுரேலிய இலக்குகளை எதிர்த்துத் தற்கொலைத் தாக்குதல் நடத்துவது நியாயமானது. ஏனென்றால் நாங்கள் காலனி யாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். மறுபுறம், அமெக்காவில் தாக்குதல் நடத்தியவர்கள் எந்தக் குறிக்கோளுக்காகவும் அப்படிச் செய்யவில்லை." தற்கொலைத் தாக்குதல் என்பது ஒரு போர் முறை - அதனை விடுதலைப் போராளிகளும் பயன்படுத்தலாம், பயங்கரவாதிகளும் பயன்படுத்தலாம். தாக்கப்படுவது யார்? தாக்குதலின் குறிக்கோள் என்ன? என்பதைப் பொறுத்தே அச்செயலின் தன்மை கணிக்கப்படும்.
பயங்கரவாதத்திலிருந்து மீட்பதாக இருந்தாலும் சரி, புதுப் பயங்கரவாதிகள் தோன்றுவதைத் தடுப்பதாக இருந்தாலும் சரி,
வேர்க் காரணங்கள் களையப்பட வேண்டும். வேறுவிதமாகச் சொன்னால் உறுதியான, முழுமையான சனநாயகமே பயங்கரவாதத்துக்கு நிலையான தீர்வு
அமெரிக்க அதிபர் புஷ் 9/11 தாக்குதலின் படிப்பினைகளைச் சரியாக உள்வாங்கவில்லை.
ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் அமெரிக்கப் படைகளை ஏவினார், மேலும் பல உயிர்கள் பறிபோவதற்கு வழி செய்தார்.
"நிபுணர்"களைத்தான் இவர்கள் நம்பியுள்ளனர். இதன் விளைவு குடிப் பயங்கரவாதத்தை ஒடுக்குவதன் பெயரால் அரசப் பயங்கரவாதம் வளரப் போகிறது என்பதே. 9/11க்குப் பின் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் அரங்கேறிய அதே நிகழ்ச்சிப்போக்குஇவர்களின் ஊதுகுழலாய் விளங்கும் ஊடகங்களும் கூட மக்கள் சார்புச் சிந்தனையற்றவை.
இந்தத் துயரமானசூழலை சிங்கள அரசு தன் புலி எதிர்ப்புப் பரப்புரைக்குப் பயன்படுத்தி சிங்கள அரசபயங்கரவாதம் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழீழத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது
உலகம் எல்லாம் பார்த்துகொண்டிருக்க முள்ளியில் நடந்தேறிய அரச பயங்கரவாதம் எந்த வகையில் சேர்க்க போகிறார்கள் இந்த சர்வதேச நிபுணர்கள் ????????????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக