செவ்வாய், 20 ஜூலை, 2010

ஆபத்தான பொறிவெடிகள் மற்றும் இலகுவில் செயலிழக்கச் செய்ய முடியாத கண்ணிவெடிகளை முன்னாள் பெண் போராளிகளை கொண்டு அகற்றும் முயற்சியில் சிறலங்கா ....?!

வடக்கில் ஆபத்தான முறையில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றவதற்கு விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளிகளைப் பயன்படுத்துவதற்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.



முப்பது பேர் கொண்ட முன்னாள் பெண் போராளிகள் அணியொன்றை கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இவர்களில் பலர் ஏற்கனவே வடக்கில் கண்ணிவெடிகளைப் புதைக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டவர்கள் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.


ஆறு அரசசார்பற்ற நிறுவனங்கள் இந்தப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் பெண் போராளிகள் அந்த அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக