சனி, 21 ஆகஸ்ட், 2010

வடக்கை முழுமையாக மையப்படுத்தி யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகம்


யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்தியாவின் தனித்தனித் துணைத் தூதரகங்கள் அமைக்கப்படவுள்ளமை குறித்து இலங்கை அரசுக்கு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் சி.ஆர்.ஜெயசிங்கவுக்கு இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா இச் செய்தியை சம்பிரதாய பூர்வமாக அறிவித்துள்ளார்.யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவிருக்கும் துணைத் தூதரகம் மூலம் நன்மைகளை அடைவார்கள் என்றும் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனறாகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட விருக்கும் துணைத் தூதரகம் மூலம் நன்மைகளை அடைவார்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த , டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசியிருந்தார். இருவருக்குமிடையில் அங்கு இடம்பெற்ற பரஸ்பரப் பேச்சுக்களின் பலனாகவே இத் துணைத் தூதரகங்கள் அமைக்கப்படவுள்ளன என்று இந்தியத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக