புதன், 8 செப்டம்பர், 2010

18ஆவது அரசியலமைப்பு திருத்தம் 144 மேலதிக வாக்குகளால் வென்றது

18-வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும் பான்மை அதிகாரத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர் திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரும்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.இலங்கை ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்களை வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது.


சட்டமூலத்திற்கு ஆதரவாக 161 வாக்கு களும் எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன. பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இவ் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித் துள்ளது. ஐ.தே.கட்சியின் சிலரும் முஸ்லிம்காங்கிரசும் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் பியசேனவும் ஆதரவாக வாக் களித்தார்.18-வது அரசியலமைப்புத் திருத் தத்திற்கு தமிழ் தேசியக் கூட்மைப்பின் 10 நா டாளுமன்ற உறுப்பினர்களும், ஜனநாயக தேசி யக் கூட்டமைப்பின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக மொத்தம் 17 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான உபேக்சா சுவர்ண மாலினி நிமல் விஜேசிங்க, லஷ்மன் செனவிரட்ன, அப் துல்காதர், மனு­ நாணயக்கார, ஏர்ல் குணசேகர, பீ.திகாம்பரம், பிரபாகணே­ன், ஜே.ஸ்ரீ ரங்கா ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். 18-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதனையடுத்து கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக அரசாங்க ஆதரவாளர்களால் வெற்றிக்களிப்பில் வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக