புதன், 8 செப்டம்பர், 2010

ஆசியாவின் முக்கியமான உறுப்பினர் சீனா.

தெற்காசியாவில் தனது வகிபாகத்தை கோடிட்டுக்காட்டியுள்ள சீனா, ஆசியாவின் முக்கியமான உறுப்பினர் என்ற வகையில் உபகண்டத்தின் சமாதானத்திற்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தான் விரும்புவதாகக் கூறியுள்ளது. தெற்காசியா உட்பட ஆசியாவின் சமாதானம், ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு சீனா பற்றுறுதியுடன் இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் ஜியாங் யூ கூறியுள்ளார்.


"ஆசியாவின் முக்கியமான உறுப்பினராக சீனா உள்ளது. ஆசியாவின் சமாதானம், ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் நாம் உறுதியுடன் இருக்கிறோம். தெற்காசியா உட்பட ஏனைய நாடுகளுடன் பொதுவான அபிவிருத்தி இலக்கு தொடர்பாக இணைந்து செயற்பட உறுதிப்பாட்டுடன் உள்ளோம் என்று ஜியாங் யூ செய்தியாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.

தெற்காசியாவில் செல்வாக்கை அதிகரிக்க சீனா முயற்சிப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த திங்கட்கிழமை எச்சரித்துள்ள நிலையில் அதற்கு பதிலளிப்பதாக சீனாவிடமிருந்து இக்கருத்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சக்திமிக்கவையாக வளர்ந்துவரும் இந்தியாவும் சீனாவும் இரு நாடுகளினதும் பொதுவான அபிவிருத்தி நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட முடியும் என்றும் ஜியாங் கூறியுள்ளார். "சீனாவும் இந்தியாவும் அயலவர்கள் அத்துடன் புதிதாக சக்திமிகுந்தவையாக மேலெழுந்துவரும் நாடுகள். சிறந்த அயலவர்களாகவும் நட்புறவுடையோராகவும் பொதுவான அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதானது இருதரப்பினரினதும் பொது நலன்களுக்கு உகந்ததாக அமையும்%27 என்றும் அவர் கூறியுள்ளார்.

"சமாதானமானதும் ஸ்திரமானதும் சுபிட்சமானதுமான தெற்காசியாவை நாம் பார்க்க விரும்புகிறோம். சமாதான சக இருப்பு தொடர்பான ஐந்து கோட்பாடுகளின் அடிப்படையில் தெற்காசிய நாடுகளுடன் நாம் செயற்பட விரும்புகிறோம். இந்தியா உட்பட இந்நாடுகளுடன் சிறந்த அயலுறவு, ஒத்துழைப்பை விருத்தி செய்ய விரும்புகிறோம்%27 என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக